Latest Updates
-
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
கடகத்தில் குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
ஆரோக்கியமான...குடைமிளகாய் சான்விட்ச்!!!

தேவையான பொருட்கள் :
குடைமிளகாய் - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
பிரட் - 4-8
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
சீஸ் - 2-3
வெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. முதலில் குடைமிளகாய், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நன்கு நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் பிரட்-ன் முனைகளை வெட்டி அகற்றி விடவும்.
2. பின் ஒரு வாணலியை வைத்து அதில் சிறிது வெண்ணெய் விட்டு நறுக்கிய காய்கறிகளை போட்டு சிறிது உப்பைத் தூவி, 2 நிமிடம் வதக்கி இறக்கி விடவும்.
3. பிறகு பிரட்-ன் இரண்டு புறமும் வெண்ணெயை தடவி, அதன் மேல் வதக்கிய காய்கறிகளை வைக்கவும்.
4. பின் அதன் மேல் சீஸ் துண்டுகளை வைத்து, மிளகுத்தூள் மற்றும் உப்பை தூவவும்.
5. ஒரு தவாவை அடுப்பில் வைத்து சூடு செய்து, அதில் இந்த பிரட்-ஐ வைத்து சிறிது வெண்ணெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக சூடு செய்யவும்.
இப்போது சூடான சுவையான குடைமிளகாய் சான்விட்ச் ரெடி!!! வேண்டுமென்றால் அழகுக்காக இதன்மேல் சிறிது முட்டைகோஸை நறுக்கி தூவி, தக்காளி சாஸ் விட்டு சாப்பிடலாம். அசைவம் சாப்பிடுபவர்கள், அதில் முட்டையை ஆம்லெட் செய்தோ அல்லது பொரியல் செய்து வைத்தோ சாப்பிடலாம்.
மேலும் வேறு எதாவது காய்கறிகள் சேர்க்க வேண்டுமென்றாலும், காய்கறிகளை எண்ணெயில் வறுத்து பயன்படுத்தலாம். பிரட்டில் வெள்ளை பிரட்டிற்கு பதிலாக ப்ரௌன் பிரட்டை பயன்படுத்தலாம். ஏனெனில் ப்ரௌன் பிரட்டானது கோதுமை அல்லது மற்ற தானியங்களால் செய்யப்பட்டது ஆகும். ஆகவே அது டையட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்தது. ஆனால் வெள்ளை பிரட்டானது மைதாவால் செய்யப்பட்டது. இது உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல.



Click it and Unblock the Notifications
