Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க
தட்டைப்பயறு கிரேவி
தட்டைப்பயறில் இரும்புச்சத்து, கால்சியம், புரோட்டீன் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. இதனை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால், இச்சத்துக்களைப் பெறலாம். மேலும் இதனை பலவாறு சமைத்து சாப்பிடலாம். இங்கு அந்த தட்டைப்பயறைக் கொண்டு எப்படி கிரேவி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.
அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த தட்டைப்பயறு கிரேவியை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
தட்டைப்பயறு - 1 கப்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 3 பற்கள் (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
சீரகம் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் தட்டைப்பயறை நீரில் 5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்னர் குக்கரில் அதனைப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும். விசில் போனதும் குக்கரைத் திறந்து அதில் உள்ள நீரை வடிகட்டிக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு தாளித்து, பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள் மற்றும் அளவாக உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
தக்காளி நன்கு மென்மையாக வெந்ததும், அதில் கரம் மசாலா, வேக வைத்த தட்டைப்பயறு, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், தட்டைப்பயறு கிரேவி ரெடி!!!



Click it and Unblock the Notifications
