Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
பாகற்காய் சுக்கா
பாகற்காய் கசப்பு என்பதற்காக பலர் இதனை அதிகம் சாப்பிடமாட்டார்கள். ஆனால் பாகற்காயை சரியான பக்குவத்தில் சமைத்து சாப்பிட்டால், நிச்சயம் அது மற்ற உணவுகளின் சுவையை விட சூப்பராக இருக்கும். அந்த வகையில் இங்கு அருமையான முறையில் எப்படி பாகற்காயை சுக்கா செய்வதென்று கொடுத்துள்ளோம்.
அந்த பாகற்காய் சுக்கா மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டது. மேலும் இந்த பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான ஒரு உணவுப் பொருள். ஆகவே நீரிழிவு நோயாளிகள் இதனை அதிகம் உட்கொண்டு வந்தால், நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.
சரி, இப்போது அந்த பாகற்காய் சுக்காவின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 4 (நறுக்கியது)
வெங்காயம் - 2 (பெரியது மற்றும் பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (பெரியது மற்றும் பொடியாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 (பெரியது மற்றும் பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் நறுக்கிய பாகற்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி, தனியாக 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள பாகற்காயைப் போட்டு, பொன்னிறமாக வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதே வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின் அதில் தக்காளியை சேர்த்து, 3 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து, உருளைக்கிழங்கை வேக வைக்க வேண்டும்.
இறுதியில் வறுத்து வைத்துள்ள பாகற்காய், கரம் மசாலா, துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கி விட வேண்டும்.
இப்போது சூப்பரான பாகற்காய் சுக்கா ரெடி!!!



Click it and Unblock the Notifications
