Latest Updates
-
குழந்தை பெற்றுக்கொள்ள இலட்சக்கணக்கில் மானியம் கொடுக்கும் நாடுகள் - டிக்கெட்டை உடனே போடுங்க -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாசம் இந்த 3 ராசிக்காரங்களை வெச்சு செய்யப்போகுது.. உஷார்.. -
கல்யாண வீட்டு தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அக்டோபர் 13 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமலை கொட்டப்போகுதாம் - என்ஜாய் பண்ணுங்க -
புதன் விசாக நட்சத்திரத்திற்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கப் சுண்டல் இருந்தா இந்த சத்தான பாலக் சன்னா மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
கீ போர்டில் Space பட்டன் மட்டும் ஏன் பெரிதாக உள்ளது? அதற்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன தெரியுமா? -
Navaratri 2026: நவராத்திரியின் போது இந்த 7 செயல்களை தெரியாம கூட செஞ்சுராதீங்க - அதான் உங்களுக்கு நல்லது -
ஐயங்கார் ஸ்டைல் சத்தான உளுந்து சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரமாதமா இருக்கும் -
இந்தியாவில் தங்கம் கிடைத்த 3 தங்க நதிகள் என்னென்ன தெரியுமா? இந்த நதிகள் எந்த மாநிலத்தில் ஓடுது தெரியுமா?
கிருஷ்ண ஜெயந்தி 2019: கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் சைவ ரெசிபிக்கள்!!!
இந்த வருட கிருஷ்ண ஜென்மாஷ்டமி வரும் சனிக்கிழமை ஆகஸ்ட் மாதம் 24 ஆம் நாள் கொண்டாடப்பட இருக்கிறது.கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை அன்று வீட்டில் அனைவரும் மிகவும் பிஸியாக இருப்போம். ஏனெனில் வீட்டை சுத்தம் செய்து, மாலையில் பூஜை செய்வதற்கு பூஜை அறையை நன்கு அலங்கரித்து, வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை கிருஷ்ணனின் பாத சுவடுகளை வரைவது போன்ற வேலைகளுக்கிடையே மதியம் சாப்பிடுவதற்கு சமையல் செய்ய வேண்டியிருக்கும். அப்போது தினமும் செய்வது போல், வெறும் காய்கறிளை கொண்டு மட்டும் செய்யாமல், அத்துடன் கண்ணணுக்கு பிடித்த பால் பொருட்களில் ஒன்றான பன்னீர், தயிர் போன்றவற்றைக் கொண்டு வித்தியாசமான சுவையில் சமையல் செய்யலாம்.
அதற்கு தமிழ் போல்ட் ஸ்கை, ஒருசில பன்னீர் மற்றும் சில வித்தியாசமான சுவை கொண்ட ரெசிபிக்களை பட்டியலிட்டுள்ளோம். இத்தகைய ரெசிபிக்கள் அனைத்தும் செய்வதற்கு மிகவும் எளிமையானது மற்றும் ஸ்பெஷலான ரெசிபியாகவும் இருக்கும். சரி, இப்போது கிருஷ்ண ஜெயந்திக்கு செய்யக்கூடிய சில சைவ ரெசிபிக்களைப் பார்ப்போம்.

பன்னீர் அட்ரகி

வெங்காயம் சேர்க்காத உருளைக்கிழங்கு குழம்பு
பொதுவாக விரதம் இருப்பவர்கள், சமையலில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். அத்தகையவர்களுக்கு ஒரு அருமையான கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் ரெசிபி உள்ளது. அது தான் உருளைக்கிழங்கு குழம்பு.

தக்காளி பன்னீர் கிரேவி
தக்காளி பன்னீர் கிரேவி மிகவும் சுவையான, எளிதில் சமைக்கக்கூடிய அளவில் இருப்பதோடு, உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒரு ரெசிபி என்றும் சொல்லலாம். இதனை கிருஷ்ண ஜெயந்திக்கு வீட்டில் செய்தால், ஒரு ஸ்பெஷல் ரெசிபியாக இருக்கும்.

காஷ்மீரி தம் ஆலு
காஷ்மீர் ஸ்டைல் உணவுகளில் மிகவும் பிரபலமானது தான் தம் ஆலு. பொதுவாக பண்டிகை என்றால், அனைத்து வீடுகளிலும் உருளைக்கிழங்கு கொண்டு ஒரு ரெசிபியை செய்வோம். அந்த வகையில் இந்த கிருஷ்ண ஜெயந்தி பண்டிகைக்கு காஷ்மீரி தம் ஆலு ரெசிபியை செய்யலாம்.

தபா ஸ்டைல்: ஷாஹி பன்னீர்
தபா ஸ்டைல் உணவுகள் மிகவும் பிரபலமானவை. அதிலும் இந்த ஸ்டைல் உணவுகளில் நறுமணம் மற்றும் சுவை மிகவும் கூடுதலாக இருக்கும். குறிப்பாக சைவ உணவுகளில் ஷாஹி பன்னீர் ரெசிபியின் சுவைக்கு அளவே இல்லை. இதுவும் பண்டிகை காலத்தில் செய்வதற்கு ஏற்ற வித்தியாசமான ரெசிபியும் கூட.

பன்னீர் ஹரியாலி
நல்ல மணத்துடனும், நிறத்துடனும் ஒரு வித்தியாசமான ஸ்பெஷல் செய்ய நினைத்தால், பன்னீர் ஹரியாலியை முயற்சி செய்யலாம். இதுவும் மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டது. மேலும் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே செய்யக்கூடியது.

ஹைதராபாத் தயிர் வெண்டைக்காய் மசாலா
நன்கு காரமான ரெசிபியை செய்ய ஆசைப்பட்டால், ஹாதராபாத் தயிர் வெண்டைக்காய் மசாலா சரியானதாக இருக்கும்.

தயிர் பன்னீர் ரெசிபி
பால் பொருட்களான தயிர் மற்றும் பன்னீர் இரண்டையும் சேர்த்து சமைக்க விரும்பினால், தயிர் பன்னீர் ரெசிபி சரியானதாக இருக்கும். மேலும் இது காரம் குறைவாக இருப்பதால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உருளைக்கிழங்கு சீரக வறுவல்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு உணவுப் பொருள் தான் உருளைக்கிழங்கு. அத்தகைய உருளைக்கிழங்கை பல சுவைகளில் சமைக்கலாம். அவற்றில் பண்டிகைக்கு ஏற்றவாறு இருப்பது உருளைக்கிழங்கு சீரக வறுவல் தான்.

சோயா பீன்ஸ் குருமா
சிலர் கிருஷ்ண ஜெயந்திக்கு விரதம் இருப்பார்கள். அப்போது நல்ல புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் இருக்கும் சோயா பீன்ஸ் கொண்டு அருமையான சுவையில் குருமா செய்து சாதத்துடன் சாப்பிடலாம்.

பூசணிக்காய் பொரியல்
பூசணிக்காய் பொரியல் இல்லாத பண்டிகையா என்று கேட்கலாம். ஏனெனில் சிலர் பண்டிகை என்று வந்தால், பூசணிக்காயைக் கொண்டு சமையல் செய்வார்கள். ஆகவே இந்த முறை சற்று வித்தியாசமாக பெங்காலி ஸ்டைலில் பொரியல் செய்து சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications
