Latest Updates
-
இந்தியாவில் தங்கம் கிடைத்த 3 தங்க நதிகள் என்னென்ன தெரியுமா? இந்த நதிகள் எந்த மாநிலத்தில் ஓடுது தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாசம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
தஞ்சாவூர் ஸ்பெஷல் அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. சைடு டிஷ்ஷே வேண்டாம்.. -
அக்டோபர் 12 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை பிரச்சினைகள் விடாமல் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navratri 2026: யானை வாகனத்தில் வரும் துர்கா தேவியால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரங்க இவங்க தான்! -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. -
குரு அதிசார பெயர்ச்சி பலன் 2026 - பாதிப்பு யாருக்கு? பரிகாரம் என்ன? - ஜோதிடர் கணிப்பு! -
புரட்டாசி ஸ்பெஷல் செட்டிநாடு கல்யாண பிரிஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
ஓம நீர் Vs சோம்பு நீர் - இவற்றில் உண்மையில் செரிமானத்திற்கு சிறந்தது எது? -
அக்டோபர் 19-ல் சொந்த ராசியில் அஸ்தமனமாகும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், பணம் பெருகும்..
ஐயங்கார் ஸ்டைல் சத்தான உளுந்து சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரமாதமா இருக்கும்
Iyengar Style Ulundu Sadam Recipe in Tamil: ஒவ்வொரு நாளும் என்ன சமைப்பது என்பதுதான் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை. தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து போரடித்துவிட்டதா? அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிக்களை வீட்டில் செய்து சுவைக்க விரும்புவீர்களா? அப்படியென்றால் ஐயங்கார் ஸ்டைலில் உளுந்து சாதத்தை முயற்சி செய்து பாருங்கள்.

பொதுவாக ஐயங்கார் ஸ்டைல் ரெசிபி என்றாலே அதற்கு தனித்துவமான ருசியும், மணமும் இருக்கும் என்று கூறுவார்கள். இந்த உளுந்து சாதமும் அதற்கு விதிவிலக்கல்ல. சாம்பார், புளிக்குழம்பு என்று சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த சத்தான மற்றும் சுவையான உளுந்து சாதம் வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். இந்த உளுந்து சாதம் செய்வதற்கு எளிதானது, இதன் சுவையும் மிகவும் தனித்துவமானதாக இருக்கும். இந்த உளுந்து சாதத்தை பல பெருமாள் கோவில்களில் பிரசாதமாகக் கொடுப்பார்கள். இதை நீங்கள் வீட்டிலேயே முயற்சி செய்து பார்க்கலாம்.
உங்களுக்கு ஐயங்கார் ஸ்டைல் உளுந்து சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஐயங்கார் ஸ்டைல் உளுந்து சாத ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- சமைத்த சாதம் - 4 கப்
- உளுத்தம் பருப்பு - 3 ஸ்பூன்
- காய்ச்சிய பால் - 2 கப்
- துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- பெருங்காயத் தூள் - 1/4 ஸ்பூன்
- நெய் - 3 ஸ்பூன்
- முந்திரி - சிறிதளவு
- வர மிளகாய் - 4
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- அரிசியை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல், உதிரியாக இருக்கும்படி சமைக்கவும். சமைத்த சாதத்தை ஒரு தட்டில் பரப்பி ஆறவிடவும்.
- ஒரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றிச் சூடாக்கி, அதில் உளுத்தம் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- பின்னர் கறிவேப்பிலை, பெருங்காயம் மற்றும் துருவிய தேங்காய் ஆகியவற்றைச் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கவும்.
- தேங்காய் மொறுமொறுப்பாக மாறும் வரை வதக்கிக்கொள்ளவும். வதக்கிய கலவையை ஒரு தட்டில் மாற்றி ஆறவிடவும்; ஆறியதும் மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பான பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
- பின்னர் அதே வாணலியில் பாலை ஊற்றி, அரைத்து வைத்துள்ள பொடியைச் சேர்த்துத் தொடர்ந்து கிளறவும். உளுந்து கலவை பாலில் நன்றாக வேக வேண்டும்.
- கலவை கெட்டியான பதத்திற்கு வந்து வாணலியின் ஓரங்களிலிருந்து பிரிந்து வரத் தொடங்கும்போது, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும்.
- இந்தக் கலவையை தேவையான அளவு சமைத்த சாதத்துடன் சேர்க்கவும். 2 ஸ்பூன் நெய்யைச் சூடாக்கி, அதில் முந்திரி, வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துச் சாதத்தில் சேர்க்கவும்.
- சாதம் உடையாதவாறு மெதுவாகக் கலக்கவும். இல்லையெனில், வாணலியில் உள்ள கலவையிலேயே சமைத்த சாதம் மற்றும் தாளித்த பொருட்களைச் சேர்த்தும் மெதுவாகக் கலக்கலாம்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஐயங்கார் ஸ்டைல் உளுந்து சாதம் ரெடி. இதை மொறுமொறுப்பான அப்பளத்துடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
