Latest Updates
-
அக்டோபர் 13 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமலை கொட்டப்போகுதாம் - என்ஜாய் பண்ணுங்க -
புதன் விசாக நட்சத்திரத்திற்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கப் சுண்டல் இருந்தா இந்த சத்தான பாலக் சன்னா மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
கீ போர்டில் Space பட்டன் மட்டும் ஏன் பெரிதாக உள்ளது? அதற்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன தெரியுமா? -
Navaratri 2026: நவராத்திரியின் போது இந்த 7 செயல்களை தெரியாம கூட செஞ்சுராதீங்க - அதான் உங்களுக்கு நல்லது -
ஐயங்கார் ஸ்டைல் சத்தான உளுந்து சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரமாதமா இருக்கும் -
இந்தியாவில் தங்கம் கிடைத்த 3 தங்க நதிகள் என்னென்ன தெரியுமா? இந்த நதிகள் எந்த மாநிலத்தில் ஓடுது தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாசம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
தஞ்சாவூர் ஸ்பெஷல் அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. சைடு டிஷ்ஷே வேண்டாம்.. -
அக்டோபர் 12 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை பிரச்சினைகள் விடாமல் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை
கல்யாண வீட்டு தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. தாறுமாறா இருக்கும்..
Kalyana Veetu Thakkali Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? இந்த இட்லி, தோசைக்கு உங்கள் வீட்டில் உள்ளோர் சட்னியைத் தான் விரும்பி சாப்பிடுவார்களா? அதுவும் தக்காளி சட்னியை அடிக்கடி செய்யச் சொல்லி கேட்பார்களா? நீங்கள் எப்போதும் தக்காளி சட்னியை ஒரே மாதிரி தான் செய்வீர்களா?

சற்று வித்தியாசமான சுவையில் இந்த தக்காளி சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கல்யாண வீட்டு தக்காளி சட்னியை செய்யுங்கள். இந்த சட்னியை செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு இந்த கல்யாண வீட்டு தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கல்யாண வீட்டு தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 150 மிலி
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 8 (விதைகளை நீக்கியது)
* மல்லி விதை - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 20 கிராம் (நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1/2 கிலோ (நறுக்கியது)
* தக்காளி - 1/2 கிலோ (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 3 கொத்து
* கொத்தமல்லி - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 20 கிராம்
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் அதில் 20 மிலி எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து
பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் 100 மிலி எண்ணெய் ஊற்றி சூடானதும், மல்லி,
பூண்டு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய இஞ்சியை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயத் தூள், புளி
ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பருப்பு மற்றும் மிளகாயை சேர்த்து,
அத்துடன் வதக்கிய தக்காளி கலவையை சேர்த்து, கொரகொரவென்று அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 30 மிலி
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை,
குண்டு மிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்தால், கல்யாண
வீட்டு தக்காளி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
