Latest Updates
-
கீ போர்டில் Space பட்டன் மட்டும் ஏன் பெரிதாக உள்ளது? அதற்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன தெரியுமா? -
Navaratri 2026: நவராத்திரியின் போது இந்த 7 செயல்களை தெரியாம கூட செஞ்சுராதீங்க - அதான் உங்களுக்கு நல்லது -
ஐயங்கார் ஸ்டைல் சத்தான உளுந்து சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரமாதமா இருக்கும் -
இந்தியாவில் தங்கம் கிடைத்த 3 தங்க நதிகள் என்னென்ன தெரியுமா? இந்த நதிகள் எந்த மாநிலத்தில் ஓடுது தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாசம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
தஞ்சாவூர் ஸ்பெஷல் அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. சைடு டிஷ்ஷே வேண்டாம்.. -
அக்டோபர் 12 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை பிரச்சினைகள் விடாமல் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navratri 2026: யானை வாகனத்தில் வரும் துர்கா தேவியால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரங்க இவங்க தான்! -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. -
குரு அதிசார பெயர்ச்சி பலன் 2026 - பாதிப்பு யாருக்கு? பரிகாரம் என்ன? - ஜோதிடர் கணிப்பு!
1/2 கப் சுண்டல் இருந்தா இந்த சத்தான பாலக் சன்னா மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும்
Palak Chana Masala Recipe in Tamil: இட்லி, தோசைக்குப் பிறகு பெரும்பாலான வீடுகளில் காலை அல்லது இரவு உணவாக இருப்பது சப்பாத்தி அல்லது பூரிதான். சப்பாத்தி செய்வதற்கு எளிதானதாக இருப்பதுடன் மிகவும் ஆரோக்கியமானதும் கூட. அதனால்தான் எடையைக் குறைக்க விரும்புபவர்களின் பிரதான விருப்பமாக சப்பாத்தி உள்ளது.

சப்பாத்தி ஆரோக்கியமானது மட்டுமல்ல சரியான சைடிஷுடன் சாப்பிடும்போது சுவையானதும் கூட. சப்பாத்திக்கு ஆஸ்தான சைடிஷ் என்றால் அது உருளைக்கிழங்கு குருமாதான். ஆனால் அது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல. எனவே சப்பாத்திக்கு வேறு சைடிஷ் செய்வதே உங்களின் ஆரோக்கிய தேவையை பூர்த்தி செய்யும். அப்படி ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான சைடிஷ்தான் பாலக் சன்னா மசாலா.
உங்களுக்கு சுவையான பாலக் சன்னா மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாலக் சன்னா மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 கப் நறுக்கிய பாலக் கீரை
- ½ கப் கொண்டைக்கடலை
- 1 நறுக்கிய பெரிய வெங்காயம்
- 2 பெரிய தக்காளி
- 4 பச்சை மிளகாய்
- 1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 ஸ்பூன் சன்னா மசாலா
- கால் ஸ்பூன் சர்க்கரை
- 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 பட்டை
- 1 கிராம்பு
- 1 ஏலக்காய்
- ½ ஸ்பூன் சீரகம்
செய்முறை:
- கொண்டைக்கடலையைக் கழுவி, இரவு முழுவதும் ஊறவைக்கவும். மறுநாள் நீரை மாற்றிவிட்டு, சிறிது உப்பு சேர்த்து குக்கரில் 4-5 விசில் வரும் வரை வேகவைக்கவும். கொண்டைக்கடலை நன்கு மென்மையாக வேக வேண்டும்.
- கீரையைச் சுத்தம் செய்து, அழுத்தி அளந்தால் 2 கப் வரும் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும்.
- முதலில், ஒரு ஸ்பூன் எண்ணெயில் நறுக்கிய பாலக் கீரை மற்றும் பச்சை மிளகாயை உடைத்து சேர்த்து, அவற்றின் அளவு சுருங்கும் வரை வதக்கவும்.
- வதக்கிய கீரையை ஆறவைத்து, சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக்கொள்ளவும்.
- மீதமுள்ள எண்ணெயை வாணலியில் சூடாக்கி, அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சீரகத்தை சேர்த்து வதக்கவும்.
- சீரகம் பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கியதும், இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.
- அதன்பின் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் சிறிதளவு உப்பு சேர்க்கவும். தக்காளி நன்கு குழைந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை சமைக்கவும்.
- பின்னர் அரைத்த பாலக் விழுதை ஊற்றவும்.அதன்பின் மஞ்சள் தூள், சர்க்கரை மற்றும் சன்னா மசாலாத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- வேகவைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். 8 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
கிரேவி நன்கு கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிடவும். எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து சப்பாத்தி அல்லது பூரியுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
