Latest Updates
-
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
உருளைக்கிழங்கு கோப்தா
உருளைக்கிழங்கு பிரியர்களே! உங்களுக்காக ஒரு அருமையான உருளைக்கிழங்கு ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அது தான் உருளைக்கிழங்கு கோப்தா. இது வடஇந்திய ரெசிபிக்களில் மிகவும் பிரபலமான ஒன்று. பொதுவாக இந்த ரெசிபியை மலாய் கொண்டு தான் செய்வார்கள். ஆனால் இங்கு மலாய்க்கு பதிலாக உருளைக்கிழங்கு பயன்படுத்தி எப்படி செய்வது என்று கொடுத்துள்ளது.
சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு கோப்தா ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 6-7 (வேக வைத்து தோலுரித்தது)
பச்சை மிளகாய் - 2-3 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
முந்திரி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு மசித்து, அத்துடன் சோள மாவு, 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1 டீஸ்பூன் சீரகப் பொடி, 1 டீஸ்பூன் மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஈரமான கையால் அதனை சிறு சிறு உருண்டைகளாக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு தீயை குறைத்து, அதே எண்ணெயில் பட்டை, இஞ்சி, தக்காளி, முந்திரி பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, பின் அத்துடன் மீதமுள்ள மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், சீரகப் பொடி சேர்த்து நன்கு கிளறி, சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்த, எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்கி விட வேண்டும்.
பின் அதில் தண்ணீர் ஊற்றி, 10 நிமிடம் கொதிக்க விட்டு, பின்பு பொரித்து வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு கோப்தா ரெடி!!!



Click it and Unblock the Notifications
