Latest Updates
-
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது!
வீட்ல வாழைக்காய் இருக்கா? அப்ப இந்த மாதிரி வித்தியாசமா குழம்பு செஞ்சு சாப்பிடுங்க...டேஸ்ட் பிரமாதமா இருக்கும்!
Vazhakkai Urundai Kulambu Recipe in Tamil: ஒவ்வொரு நாளும் என்ன சமைப்பது என்பதுதான் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை. தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து போரடித்துவிட்டதா? அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிக்களை வீட்டில் செய்து சுவைக்க விரும்புவீர்களா? உங்கள் வீட்டில் வாழைக்காய் உள்ளதா?
அப்படியானால் அந்த வாழைக்காயைக் கொண்டு ஒரு உருண்டை தயாரித்து, குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த வாழைக்காய் உருண்டை குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். இந்த பதிவில் வாழைக்காய் உருண்டைக் குழம்பை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள் :
வாழைக்காய் உருண்டை செய்ய:
- வாழைக்காய் - 2
- உருளைக்கிழங்கு - 2
- இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
- சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
- கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
- எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
கிரேவி செய்ய:
- இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
- தக்காளி சாறு - 1/4 கப்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- பிரியாணி இலை - 1
- சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
- மல்லி தூள் - 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கடலை மாவு - 1 டீஸ்பூன்
- வெதுவெதுப்பான நீர் - 1 கப்
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லி தழை - சிறிது
செய்முறை :
- வாழைக்காய் மற்றும் உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் உருண்டை செய்ய கொடுத்துள்ள பொருட்களில் எண்ணெயைத் தவிர, அனைத்துப் பொருட்களையும் போட்டு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
- பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டையை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பிரியாணி இலை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
- பின் அதில் அரைத்து வைத்த தக்காளி சாறை ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் வெதுவெதுப்பான நீரில் கடலை மாவை சேர்த்து கிளறி, வாணலியில் ஊற்றி கிளறி, அடுத்து பொரித்து வைத்துள்ள வாழைக்காய் உருண்டைகளை சேர்த்து 4-5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- கடைசியாக கொத்தமல்லி தழையைத் தூவி இறக்கினால் அட்டகாசமான வாழைக்காய் உருண்டை குழம்பு ரெடி.



Click it and Unblock the Notifications
