Latest Updates
-
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
ஈவ்னிங் டைம்-ல வாழைக்காய் வெச்சு இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
Vazhakkai Pakoda Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைகளுக்கு அவர்களின் பசியை போக்கும் வகையிலும், விரும்பி சாப்பிடக்கூடியவாறும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? எப்போதும் மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது வடை, பஜ்ஜி, போண்டா என்று தான் செய்வீர்களா?
அதுவும் வாழைக்காய் இருந்தால், அதைக் கொண்டு எப்போதும் பஜ்ஜி தான் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை வாழைக்காயைக் கொண்டு பக்கோடாவை செய்து கொடுங்கள். இந்த வாழைக்காய் பக்கோடா குழந்தைகள் விரும்பி சாப்பிக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு வாழைக்காய் பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைக்காய் பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வாழைக்காய் - 2
* வெங்காயம் - 1
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* மிளகாய் தூள் - 2 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/4 டீஸ்பூன்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வாழைக்காயை இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
அதேப் போல் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றையும்
பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் குக்கரில் அந்த வாழைக்காய் துண்டுகளை போட்டு, 2 டம்ளர் நீரை
ஊற்றி, அடுப்பில் வைத்து குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, வாழைக்காயை எடுத்து, அதன் தோலை
உரித்து நீக்கிவிட்டு, ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு கையால் நன்கு வாழைக்காயை மசித்து விட வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்
தூள், மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், அரிசி மாவு சேர்த்து
நன்கு கையால் பிசைந்து விட வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம்
கொஞ்சமாக கிள்ளி போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான
வாழைக்காய் பக்கோடா தயார்.
Image Courtesy: Raks Kitchen



Click it and Unblock the Notifications