Latest Updates
-
மதியம் 10 நிமிடத்தில் சமையலை முடிக்கணுமா? அப்ப இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் மசாலா செய்யுங்க.. -
வேர்க்கடலை வைச்சு வெங்காயம், தக்காளி இல்லாம இப்படி கார குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
ஒல்லியாக இருந்தாலும் கொழுப்புக் கல்லீரல் பாதிப்பு ஏற்படுமா? டாக்டர் என்ன சொல்றாருன்னு பாருங்க.. -
60 லட்சம் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள உடலின் மிகப்பெரிய சுடுகாடு எந்த நாட்டில் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
டிசம்பர் மாதத்தில் இந்த 5 ராசிக்கு மகத்தான வெற்றியும், பணமும் குவியப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
பன் தோசையும், பொட்டுக்கடலை சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 20, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு லாபம் கொட்டும் நாளாக இருக்குப்போகுதாம் -
நாளை உருவாகும் விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. அவசரப்படக்கூடாது.. -
சூரியன் தனுசு ராசிக்குள் செல்வதால் கோடிகளில் புரளப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
புடலங்காயும், தயிரும் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும்
மொறுமொறுப்பான வாழைப்பூ பக்கோடா - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.!
Vazhaipoo Pakoda Recipe In Tamil: உங்கள் வீட்டில் வாழைப்பூ உள்ளதா? பொதுவாக வாழைப்பூ இருந்தால், அதை பொரியல், வடை என்று தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் அந்த வாழைப்பூ கொண்டு கூட பக்கோடா செய்யலாம் தெரியுமா? இந்த பக்கோடா மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக வாழைப்பூ சாப்பிட பிடிக்காதவர்களுக்கு இந்த பக்கோடாவை செய்து கொடுத்தால், போட்டி போட்டு சாப்பிடுவார்கள்.
உங்கள் வீட்டில் உள்ளோர் வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி அடிக்கடி கேட்டால், ஒருமுறை இந்த வாழைப்பூ பக்கோடாவை செய்து கொடுங்கள். இந்த வாழைப்பூ பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த வாழைப்பூ பக்கோடாவின் எளிய செய்முறை காத்துவாக்குல சமையல் என்னும் இன்ஸ்டா தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் வீட்டில் இருப்போர் பக்கோடா பிரியர் என்றால், நிச்சயம் ஒருமுறை இந்த பக்கோடாவை செய்து கொடுங்கள். அதுவும் இந்த பக்குவத்தில் செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வாழைப்பூ - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கடலை பருப்பு - 100 கிராம்
* உப்பு - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
* பெரிய வெங்காயம் - 3
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* கடலை மாவு - 1/4 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கடலைப் பருப்பை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* 1/2 மணிநேரம் கழித்து, ஊற வைத்த கடலைப் பருப்பை மிக்சர் ஜாரில்
போட்டு, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு, சோம்பு, வரமிளகாய், மஞ்சள் தூள்
சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை
எடுத்து, அத்துடன் பொடியாக நறுக்கிய வாழைப்பூ, சிறிது கொத்தமல்லி,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சிறிது கறிவேப்பிலை ஆகியவற்றை
சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் கொரகொரவென்று அரைத்து வைத்துள்ள கடலைப் பருப்பு
கலவையை சேர்த்து, கைகளால் ஒருசேர பிசைய வேண்டும்.
* பிறகு அதில் கடலை மாவு மற்றும் அரிசி மாவை சேர்த்து, நீர் எதுவும்
சேர்க்காமல் நன்கு இறுக்கமாக பிசைந்து விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து லேசாக
உருட்டி எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால்,
மொறுமொறுப்பாக வாழைப்பூ பக்கோடா தயார்.



Click it and Unblock the Notifications
