1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும்

Posted By:

Varagu Arisi Sweet Paniyaram Recipe in Tamil: எப்போதும் காலையில இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று சாப்பிட்டு போராடித்து விட்டதா? இதை செய்யவில்லை என்றால் பொங்கல் அல்லது சப்பாத்தி செய்வோம். காலை உணவு என்றாலே இந்த உணவுகளைத் தவிர வேறு இல்லை என்ற நிலை வந்துவிட்டது. சற்று வித்தியாசமாக அதே சமயம் சத்தான ஒரு காலை உணவைசெய்ய ஆசைப்படுகிறீர்களா? உங்கள் வீட்டில் வரகரிசியும், நாட்டு சர்க்கரையும் இருந்தால் போதும்.

Varagu Arisi Sweet Paniyaram Recipe How to Make at Home in Tamil

இந்த பொருட்களை வைத்து ஒரு சூப்பரான மற்றும் சத்தான பணியாரத்தை செய்யுங்கள். இந்த வரகரிசி இனிப்பு பணியாரம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும், அதேசமயம் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். இந்த பணியாரத்தை காலை உணவாக மட்டுமின்றி மாலை நேர ஸ்னாக்ஸாகவும் சாப்பிடலாம். வரகரசியில் பணியாரம் செய்வது சுவையானதாக மட்டுமின்றி ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இந்த பதிவில் சத்தான வரகரிசி பணியாரத்தை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

- 1 கப் வரகரிசி
- 1 வாழைப்பழம்
- 1 கப் நாட்டு சக்கரை
- 2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 ஸ்பூன் துவரம் பருப்பு
- ¼ ஸ்பூன் வெந்தய விதைகள்
- 1 சிட்டிகை சமையல் சோடா
- ¼ ஸ்பூன் உப்பு
- 1 ஏலக்காய்
- தேவையான அளவு நெய்

செய்முறை:

- வரகரிசியை எந்த மாசும் இல்லாமல் 5 அல்லது 6 முறை நன்றாக கழுவவும்.

- அதனுடன் உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் வெந்தயம் சேர்த்து 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

- தண்ணீரை வடித்துவிட்டு, அதிக தண்ணீர் சேர்க்காமல் மென்மையான விழுதாக அரைக்கவும். ஊற வைத்த அரிசியில் இருக்கும் ஈரப்பதமே போதுமானது.

- பின்னர் அதனுடன் மசித்த வாழைப்பழம், நாட்டுச் சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

- இந்த கலவையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, குறைந்தது 5 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

- பணியாரம் செய்வதற்கு முன், உப்பு மற்றும் சமையல் சோடா சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

- பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடாக்கவும்; பின் அதில் மாவை ஊற்றவும். மூடி வைத்து 2 நிமிடங்கள் வேகவிடவும்.

- பின்னர் மறுபுறம் திருப்பிப் போட்டு, மிதமான தீயில் மேலும் 2 நிமிடங்கள் வேகவைக்கவும்.

- உங்களுக்கு பணியாரம் மொமொறுப்பாக வேண்டுமென்றால் மேலும் சிறிதளவு நெய் ஊற்றவும்.

[ of 5 - Users]
Story first published: Friday, August 21, 2026, 21:15 [IST]
q
Desktop Bottom Promotion