Latest Updates
-
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க.. -
40 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பு - எப்படி? இந்த ஒரு ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்! -
சிங்கப்பூர் வெஜ் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ரைஸ் செஞ்சா இனிமே ஹோட்டல் பக்கமே போகமாட்டிங்க -
அக்டோபரில் உருவாகியுள்ள லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு பணம் சம்பாதிக்க புதிய வழி கிடைக்கும்! -
சிப்ஸ் பாக்கெட்களில் ஏன் சிப்ஸை விட காற்று அதிகமாக உள்ளது தெரியுமா? அது சாதாரண காற்றே இல்லையாம் -
15 நிமிடத்தில் இட்லி குருமா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
அக்டோபர் 06 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஏமாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் இறுதியில் நடக்கும் குரு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசியின் பலமும்,பணமும் அதிகரிக்கப்போகுதாம்
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்..
Skin Care Tips In Tamil: பெண்கள் சந்திக்கும் ஒரு பொதுவான அழகு சார்ந்த பிரச்சனை தான் முகத்தில் முடி வளர்வது. இப்படி வளரும் முடி பெண்களின் தன்னம்பிக்கையை குறைப்பதோடு, மிகுந்த தர்மசங்கடத்திற்கும் உள்ளாக்கும். எனவே பல பெண்கள் முகத்தில் வளரும் முடியை அகற்ற அழகு நிலையங்களுக்கு சென்று த்ரெட்டிங், வேக்ஸிங் போன்ற வலிமிகுந்த அழகு சிகிச்சைகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் சில பெண்கள் இந்த வலிக்கு பயந்து, இயற்கை வழிகளின் மூலம் தங்கள் முகத்தில் வளரும் முடியை அகற்ற விரும்புகிறார்கள்.

நீங்களும் அப்படி இயற்கை வழிகளின் மூலம் முகத்தில் வளர்ந்துள்ள முடிகளை அகற்ற நினைக்கிறீர்களா? அப்படியானால் ஒருசில ஃபேஸ் பேக்குகளைப் போடுங்கள். இந்த ஃபேஸ் பேக்குகள் முகத்தில் வளர்ந்துள்ள முடிகளை அகற்றுவதோடு, சருமத்திற்கு நல்ல பொலிவையும், புத்துணர்ச்சியையும் தரும். எனினும், வீட்டில் தயாரிக்கும் ஃபேஸ் பேக்குகள் நிரந்தரமாக முக முடியை அகற்றும் என்பதற்கு உறுதியான அறிவியல் ஆதாரம் இல்லை. இப்போது முகத்தில் வளர்ந்துள்ள முடிகளை அகற்ற உதவும் இயற்கை வழிகள் என்னவென்பதைக் காண்போம்.
1. கடலை மாவு + மஞ்சள் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 80 சதவீதம் காய வைக்க வேண்டும்.
* பின்பு கையை நீரில் நனைத்து முடி வளர்ச்சிக்கு எதிரான திசையை நோக்கி தேய்த்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
2. பப்பாளி + மஞ்சள் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் மசித்த பப்பாளி காயை எடுத்து, அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க் மயிர்கால்களை பலவீனப்படுத்தி, முடியின் வளர்ச்சியை படிப்படியாக குறைக்கும். மற்றும் இது சரும பொலிவை மேம்படும்.
3. முட்டை வெள்ளைக்கரு மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சோள மாவை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* பின்பு மென்மையாக இந்த ஃபேஸ் மாஸ்க்கை உரித்து எடுத்தால், முகத்தில் வளர்ந்துள்ள மெல்லிய முடிகள் நீங்குவதைக் காணலாம்.
* இந்த ஃபேஸ் மாஸ்க்கை சென்சிடிவ் சருமத்தினர் அல்லது முகப்பரு சருமத்தினர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
4. அரிசி மாவு மற்றும் பால் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவை எடுத்து, அத்துடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* பின்னர் கைகளை நீரில் நனைத்து, மென்மையாக தேய்த்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
5. தேன் + எலுமிச்சை மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
