Latest Updates
-
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு!
ஆகஸ்ட் கடைசியில் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் வேலையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்!
Sun Transit In Pooram Nakshatra On 31 August 2026: நவகிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் தலைமைத்துவம், ஆத்மா, தந்தை, அரசு வேலை, அதிகாரம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றின் காரணியாவார். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும்.

சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் சமீபத்தில் தான் தனது சொந்த ராசிக்குள் நுழைந்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி சூரியன் நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது சூரியன் பூரம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த பூரம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன் ஆவார். இந்த சுக்கிரன் அழகு, காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார்.
இந்த நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறவுள்ளனர். இப்போது ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு மங்களகரமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். மேலும் புதிய பொறுப்புக்களும் வழங்கப்படலாம். நிதி நிலைமை வலுவடையும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தலைமைத்துவ திறன்கள் மேம்படும். சிலருக்கு தொழிலில் பெரிய அளவில் லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு இரட்டிப்பு லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம்.
துலாம்
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். செல்வம் பெருகும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இது நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை கொண்டு வரும். பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தந்தை அல்லது பரம்பரை சொத்துக்களில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தனுசு
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதுவரை வேலையில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அப்பிரச்சனை முடிவுக்கு வரும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



