Latest Updates
-
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு!
சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 5 ராசிகளின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது!
Guru Peyarchi 2026: ஜோதிடத்தின் படி 2026 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஏனெனில் இந்த மாதத்தில் மிகவும் முக்கியமான கிரக பெயர்ச்சி நிகழவுள்ளது. அதுவும் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவானின் பெயர்ச்சி நிகழவிருக்கிறது. தற்போது குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த குரு பகவான் அக்டோபர் மாதத்தில் சூரியனின் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.

நவகிரகங்களில் குரு பகவான் அதிர்ஷ்டம், அறிவு, செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். மேலும் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியான குரு பகவான், அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்வது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளன. முக்கியமாக குரு பகவானின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது.
முக்கியமாக இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கவுள்ளது, தலைமைத்துவ திறன்களில் முன்னேற்றம் ஏற்படும், சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும், தொழிலில் நல்ல முன்னேற்றமும், நிதி ஆதாயங்களும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இப்போது சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்வதால், மேஷ ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை வலுவடையும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களின் முன்னேற்ற பாதையைத் திறக்கும்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்வதால், கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். மேலும் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. குடும்ப வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். தன்னம்பிக்கை இருமடங்கு அதிகரிக்கும். மொத்தத்தில் வாழ்வில் உள்ள பணக்கஷ்டம் தீர்ந்து, மகிழ்ச்சி பெருகும்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு குரு பகவான் செல்வதால், சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிஷ்ட காற்று வீசத் தொடங்கும். சொல்லப்போனால் மற்ற ராசிக்காரர்களை விட சிம்ம ராசிக்காரர்கள் நிறைய நல்ல மாற்றங்களை காண்பார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உங்களின் செயல்திறன் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்தால், அதிலிருந்து நல்ல லாபத்தைக் காணலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்வதால், இந்த ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களால் நல்ல லாபத்தைக் காண்பார்கள். வணிகர்களுக்கு புதிய நட்புகளால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்வதால், தனுசு ராசிக்காரர்கள் அதிக நன்மைகளைப் பெறுவார்கள். வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். நீண்ட காலமாக முயற்சித்துக் கொண்டிருந்த வேலை இந்த பெயர்ச்சிக்கு பின் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பள்ளது. வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். நிதி நிலைமை வழக்கத்தை விட வலுவாக இருக்கும். பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications





