Latest Updates
-
அக்டோபர் 03 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
1 கப் பச்சைப் பயறு இருந்தா இந்த மாதிரி கொங்கு ஸ்டைல் கடையல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும் -
கடகத்தில் இருக்கும் செவ்வாய்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும்
மணமணக்கும்.. வரகரிசி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
Varagu Arisi Pongal Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? இதனால் அடிக்கடி உங்கள் வீட்டில் பொங்கல் செய்வீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கும் வெண் பொங்கல் என்றால் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் அடுத்தமுறை பொங்கல் செய்வதாக இருந்தால், அரிசியைக் கொண்டு பொங்கல் செய்யாமல் சிறுதானியங்களுள் ஒன்றான வரகரிசியைக் கொண்டு பொங்கல் செய்யுங்கள். இந்த வரகரிசி பொங்கல் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும்.

உங்களுக்கு இந்த வரகரிசி பொங்கலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வரகரிசி பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* வரகரிசி - 1/2 கப் (1/2 மணிநேரம் ஊற வைத்தது)
* தண்ணீர் - 4 கப்
* உப்பு - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நெய் - 3 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - சிறிது
* மிளகு - 1 டீஸ்பூன் (இடித்தது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் வரகரிசியை நீரில் 2-3 முறை கழுவி, நீரை ஊற்றி 1/2
மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை
சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் ஊற வைத்த வரகரிசி நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் வறுத்த பாசிப்பருப்பை சேர்த்து, அத்துடன் 4 கப் நீரை
ஊற்றி, 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து குக்கரை மூடி அடுப்பில்
வைத்து, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கரண்டியால் கிளறி விட
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் சேர்த்து
சூடானதும், முந்திரியை சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின் அதில் இடித்த மிளகு, சீரகம் சேர்த்து வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பெருங்காயத் தூள் மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வேக வைத்துள்ள வரகரிசியுடன் சேர்த்து
கிளறினால், சுவையான வரகரிசி பொங்கல் தயார்.



Click it and Unblock the Notifications
