Latest Updates
-
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்..
வரகரிசி மசாலா தோசை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க...
Varagu Arisi Masala Dosa Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் தோசை பிரியரா? எப்படி இருந்தாலும், ஒரு வேளையாவது உங்கள் வீட்டில் தோசை செய்துவிடுவீர்களா? அப்படியானால் ஒரே மாதிரி அரிசியைக் கொண்டு மட்டும் மாவு அரைத்து தோசை சுடாமல், சற்று ஆரோக்கியமாக வரகரிசியைப் பயன்படுத்தி தோசை சுடுங்கள். இப்படி வரகரிசி பயன்படுத்தி சுடும் தோசையானது ருசியாக இருப்பதோடு, சத்தானதும் கூட. அதுவும் இந்த தோசைக்கு உருளைக்கிழங்கு மசாலாவை செய்து, தோசையின் மேல் பரப்பி, மசாலா தோசையாக சாப்பிடும் போது சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த வரகரிசி மசாலா தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வரகரிசி மசாலா தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வரகரிசி தோசை மாவிற்கு...
* வரகரிசி - 1 கப்
* உளுத்தம் பருப்பு - 1/4 கப்
* அவல் - 1/4 கப்
* வெந்தயம் - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - 1 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு மசாலாவிற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (கீறிய)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* வேக வைத்த உருளைக்கிழங்கு - 5
* தண்ணீர் - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் வரகரிசி, 1/4 கப் உளுத்தம்
பருப்பு, 1/4 கப் அவல், 2 டீஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை எடுத்துக்
கொண்டு, நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் நீரை ஊற்றி, 6 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 6 மணிநேரம் கழித்து, ஊற வைத்துள்ளதை மிக்சர் ஜாரில் சேர்த்து சிறிது
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, மூடி வைத்து 8 மணிநேரம்
புளிக்க வைக்க வேண்டும். இந்த மாவை இரவு அரைத்து வைத்துக் கொண்டால்,
காலையில் செய்ய சரியாக இருக்கும்.
* அடுத்து மசாலாவிற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பெருங்காயத் தூள், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை
சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, தக்காளி நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்து தோலுரித்து துண்டுகளாக்கப்பட்ட
உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி, மேஷர் அல்லது கரண்டி கொண்டு
உருளைக்கிழங்கை அப்படியே மசித்து விட வேண்டும்.
* பின் அதில் 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, கொத்தமல்லியைத் தூவி பிரட்டி
இறக்கினால், உருளைக்கிழங்கு மசாலா தயார்.
* அடுத்து புளிக்க வைத்த மாவில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து, மாவு
மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது நீரை ஊற்றி கலந்து கொள்ள
வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், மாவை
தோசையாக ஊற்றி, மேலே நெய் ஊற்றி, முன்னும் பின்னும் வெந்ததும்,
உருளைக்கிழங்கு மசாலாவை தோசையின் மேல் பரப்பி மடித்து பரிமாறினால்,
சுவையான வரகரிசி மசாலா தோசை தயார்.
ஊட்டச்சத்து மதிப்பு:
1 பெரிய மசாலா தோசை சாப்பிட்டால் கிடைக்கும் சத்துக்கள் பின்வருமாறு:
* கலோரிகள் : 240-270 kcal (சிறுதானியம் என்பதால் கலோரி கட்டுக்குள்ளேயே இருக்கும்)
* புரதச்சத்து : 6-7 கிராம்
* கார்போஹைட்ரேட் : 42-46 கிராம் (சிக்கலான கார்போஹைட்ரேட் - உடலுக்கு நல்லது)
* நார்ச்சத்து : 6-7 கிராம் (மிக அதிக நார்ச்சத்து கொண்டது)
* கொழுப்பு : 5-6 கிராம் (மசாலா மற்றும் தோசைக்கு பயன்படுத்தும் எண்ணெய்)



Click it and Unblock the Notifications