Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
வடகறி ரெசிபி
வடகறி என்பது மிகவும் பிரபலமான ஒரு தென்னிந்திய ரெசிபி. இந்த வடகறி இட்லி, தோசை, இடியாப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இந்த வடகறி ரெசிபியானது வடையைக் கொண்டு செய்யக்கூடியது.
வடகறி என்பது மிகவும் பிரபலமான ஒரு தென்னிந்திய ரெசிபி. இந்த வடகறி இட்லி, தோசை, இடியாப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இந்த வடகறி ரெசிபியானது வடையைக் கொண்டு செய்யக்கூடியது. தென்னிந்தியர்கள் பெரும்பாலானோருக்கு இந்த வடகறி விருப்பமான ரெசிபியாக இருக்கும். இதை பலரும் கடைகளில் தான் வாங்கி சாப்பிட்டிருப்பார்கள். ஆனால் இதை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.

உங்களுக்கு வடகறி ரெசிபியை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வடகறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலைப் பருப்பு - 1 கப் (நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து கொள்ளவும்)
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* உப்பு - சுவைக்கேற்ப
கிரேவிக்கு...
* தக்காளி - 2 (நறுக்கியது)
* வெங்காயம் - 1 (நறுக்கியத)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 2
* பிரியாணி இலை - 1
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் தக்காளியை நீரில் போட்டு வேக வைத்து எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஊற வைத்துள்ள கடலைப் பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் வரமிளகாய் மற்றும் சோம்பு சேர்த்து கொரகொரவென்று அரைத்து இறக்கி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த கடலைப் பருப்பு கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, வடை போன்று தட்டி இட்லி தட்டில் வைத்து 10 நிமிடம் இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் வெங்காயத்தை சேர்த்து லேசாக பொன்னிறமாக வதக்கி, அரைத்த தக்காளியை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, அதைத் தொடர்ந்து மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து சில நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 3/4 கப் நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதிக்கும் போது, அதில் வடைகளை சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், வடகறி தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications

