Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
உருளைக்கிழங்கை ஒருவாட்டி இப்படி செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி இப்படி தான் செய்வீங்க..
Urulai Kilangu Kara Kari Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் உருளைக்கிழங்கு பிரியர்களா? அதனால் அடிக்கடி வீட்டில் உருளைக்கிழங்கை செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரி தான் செய்வீர்களா? ஆனால் சற்று வித்தியாசமான சுவையில் உருளைக்கிழங்கை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கான ரெசிபி தான் இது.
ஏனெனில் கீழே உருளைக்கிழங்கு கார கறி ரெசிபி பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கார கறி சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் என அனைத்துடனும் சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இதை செய்தால் குழந்தைகள் இதை வெறுமனே கிண்ணத்தில் போட்டு சாப்பிடுவார்கள். அந்த அளவில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு கார கறி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு கார கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உருளைக்கிழங்கு - 3
* உப்பு - சுவைக்கேற்ப
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 10 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, சதுரத் துண்டுகளாக
வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், உருளைக்கிழங்கை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
தூவி 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் காஷ்மீரி
மிளகாய் தூள் சேர்த்து நன்கு 3-4 நிமிடம் குறைவான தீயில் வைத்து பச்சை
வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 10 பூண்டு பற்களை தட்டிப் போட்டு, அத்துடன் 1 கொத்து
கறிவேப்பிலையும் சேர்த்து நன்கு 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால்,
சுவையான உருளைக்கிழங்கு கார கறி தயார்.



Click it and Unblock the Notifications