Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
ஒருவாட்டி தேங்காய் சட்னியை உடுப்பி ஹோட்டல் ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க...
Udupi Style Coconut Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் எந்த டிபன் செய்தாலும், நிச்சயம் அத்துடன் தேங்காய் சட்னியை சைடுடிஷ்ஷாக செய்வீர்களா? அப்படி செய்யும் தேங்காய் சட்னியை எப்போதும் ஒரே மாதிரி செய்யாமல், ஒருமுறை உடுப்பி ஹோட்டல் ஸ்டைலில் செய்யுங்கள்.
இதனால் தேங்காய் சட்னியின் சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னியின் சுவைக்கு காரணம், பொருட்ளை வதக்கி அரைப்பது தான். இப்படி செய்யும் போது, தேங்காய் சட்னியின் சுவை வேறு மாதிரி இருக்கும்.

உங்களுக்கு உடுப்பி ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உடுப்பி ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் - 1/4 கப்
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* வேர்க்கடலை - 1/2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 3
* பெருங்காயத் தூள் - சிறிது
* இஞ்சி - சிறிய துண்டு
* புளி - 1 சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொட்டுக்கடலை
மற்றும் வேர்க்கடலையை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் 1/2 கப் தேங்காயை எடுத்து, அத்துடன் வறுத்த
பொட்டுக்கடலை மற்றும் வேர்க்கடலையை சேர்த்து, ஒருமுறை அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து பொரிய விட
வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை மிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து பச்சை
மிளகாய் ஓரளவு வெள்ளையாகும் வரை வதக்கி இறக்கி, ஜாரில் உள்ள
தேங்காயுடன் சேர்க்க வேண்டும்.
* பிறகு அத்துடன் சிறிது இஞ்சி, புளி மறறும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் சிறிது கொத்தமல்லியை சேர்த்து அரைத்து இறக்கி, ஒரு
கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, சிறிது நீரை ஊற்றி ஓரளவு நீராக கலந்து
கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான உடுப்பி ஸ்டைல்
தேங்காய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
