Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
2 நிமிடத்தில் பொட்டுக்கடலை சேர்க்காத தேங்காய் சட்னியை செஞ்சு பாருங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...
Two Minute Coconut Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் எப்போதும் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? எந்த டிபன் செய்தாலும் உங்கள் வீட்டில் நிச்சயம் தேங்காய் சட்னி செய்வீர்களா? அதுவும் ஒரே சுவையில் தான் தேங்காய் சட்னி செய்வீர்களா? ஆனால் அந்த தேங்காய் சட்னியை பல விதமாக செய்யலாம் தெரியுமா?
நீங்கள் இதுவரை தேங்காய் சட்னியில் பச்சை மிளகாயும், பொட்டுக்கடலையும் சேர்த்து செய்து வந்தால், அடுத்தமுறை தேங்காய் சட்னியை செய்வதாக இருந்தால், அந்த இரண்டையும் சேர்க்காமலேயே அட்டகாசமான சுவையில் தேங்காய் சட்னியை செய்யுங்கள்.

இப்படி செய்யும் தேங்காய் சட்னி வழக்கமாக செய்யும் தேங்காய் சட்னியின் சுவையில் இருந்து வேறுபட்டிருக்கும். முக்கியமாக இந்த செய்வதற்கு வெறும் 2 நிமிடங்களே போதுமானது. இந்த தேங்காய் சட்னி இட்லி, தோசை, உப்புமா என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு 2 நிமிடத்தில் பொட்டுக்கடலை சேர்க்காத தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொட்டுக்கடலை சேர்க்காத தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் - 1/2 மூடி (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 3 பல்
* வரமிளகாய் - 6
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் 1/2 மூடி தேங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் நறுக்கிய தேங்காய், பூண்டு, வரமிளகாய்,
கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, சிறிது
நீரை ஜாரில் ஊற்றி அலசி சட்னியுடன் சேர்க்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை,
வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு
வதக்கி இறக்கி, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான தேங்காய்
சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











