Latest Updates
-
World Alzheimer's Day 2026: அல்சைமர் நோய் பற்றிய 10 பொதுவான கேள்விகளுக்கு நரம்பியல் நிபுணரின் பதில்கள்! -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா?
கர்நாடகா ஸ்டைல் கலக்கலான சட்னி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும்...!
Tumkur Chutney Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் காலையும், இரவும் பிரதான உணவாக இருப்பது இட்லி அல்லது தோசைதான். தினமும் இட்லி, தோசை செய்வது ஈஸியாக இருந்தாலும் அதற்கு ஏற்ற சரியான சைடிஷ் செய்வது என்பது எளிதான காரியமல்ல. இந்த பிரச்சினையை தீர்க்கத்தான் தொடர்ந்து பல்வேறு சட்னி ரெசிபிக்கள் நமது தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
எந்த வகையான சட்னி மாற்றி மாற்றி செய்தாலும் அலுத்து விடுகிறதா? சைடிஷ் என்ன செய்வது என யோசிச்சு தலைவலி வருதா? எப்படி தான் புதுமையாக செய்வதுன்னு யோசிக்கிறீங்களா? கவலைய விடுங்க நமக்கு கை கொடுக்க தான் பக்கத்து மாநிலங்கள் இருக்கே. ஆமாங்க இன்னைக்கு கர்நாடகா தும்கூர் ஸ்பெஷல் சட்னி தான் பாக்க போறோம். இந்த சுவையான தும்கூர் சட்னி எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- உளுந்து - 1 டேபிள் ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 5 அல்லது 6
- இஞ்சி - ஒரு துண்டு(ஒரு இன்ச் அளவு)
- பூண்டு - 6 பல்
- வரமிளகாய் - 3
- பச்சை மிளகாய் - 2
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
- புதினா - ஒரு கைப்பிடி அளவு
- கருவேப்பிலை - ஒரு கொத்து
- தேங்காய் - ½ மூடி
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- கடலைப் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து வைக்கவும்.
- மண் இல்லாமல் இஞ்சியை அலசி தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எடுத்து கொள்ளவும்.
- கொத்தமல்லி, புதினா, மற்றும் கருவேப்பிலை இலைகளை தண்ணீரில் சுத்தமாக அலசி உலர விடவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் அதில் உளுந்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் அதை வேறு பாத்திரத்திற்கு மாற்றி ஆற வைக்கவும்.
- வாணலியில் மீதம் இருக்கும் எண்ணெயில் சுத்தம் செய்து வைத்த பூண்டை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- பின் அதனுடன் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- அதனுடன் நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
- பின் அதில் வரமிளகாய் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வறுக்கவும்.
- சுத்தம் செய்து வைத்த புதினா, கொத்தமல்லி, மற்றும் கருவேப்பிலை இலைகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் அதில் பெருங்காயம் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
- சூடு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.
- மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடும்.
- பின் அதில் கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- கடைசியாக கருவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- இந்த தாளிப்பை சட்னி உடன் சேர்த்து கிளறினால் சுவையான தும்கூர் சட்னி தயார்!



Click it and Unblock the Notifications
