Latest Updates
-
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
துவரம் பருப்பு உருண்டை
தினமும் வடை, பஜ்ஜி போன்றவற்றை செய்வதற்கு பதிலாக, கோஃப்தா என்னும் உருண்டையை செய்து சாப்பிட்டால் இன்னும் சூப்பராக இருக்கும். அதுவும் துவரம் பருப்பு உருண்டை செய்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
மழைக்காலத்தில் மாலை வேளையில் நன்கு சூடாகவும், காரமாகவும் ஏதாவது சாப்பிடத் தோன்றும். ஆனால் வழக்கமாக செய்யும் வடை, பஜ்ஜி, போண்டா போன்றவற்றை செய்வதற்கு பதிலாக, கோஃப்தா என்னும் உருண்டையை செய்து சாப்பிட்டால் இன்னும் சூப்பராக இருக்கும். அதுவும் துவரம் பருப்பு உருண்டை செய்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு துவரம் பருப்பு உருண்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே துவரம் பருப்பு உருண்டையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 1 கப் (4 மணிநேரம் நீரில் ஊற வைத்தது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 6 பல்
* கறிவேப்பிலை - ஒரு கையளவு
* கொத்தமல்லி - ஒரு கையளவு
* பட்டை - 1 இன்ச்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* அரிசி மாவு - 1/2 கப்
* கடலை மாவு - 1/2 கப்
* பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஊற வைத்துள்ள துவரம் பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த துவரம் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே மிக்சர் ஜாரில் எண்ணெய் மற்றும் மாவுகளைத் தவிர, மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து ஒருமுறை அரைத்து, பாத்திரத்தில் உள்ள துவரம் பருப்புடன் சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.
* பிறகு அதில் அரிசி மாவு மற்றும் கடலை மாவை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், துவரம் பருப்பு கோஃப்தா/உருண்டை தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
