Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
ஆந்திரா ஸ்டைல் தக்காளி உப்புமா ரெசிபி... இந்த ஈஸியான உப்புமா சிறந்த காலை உணவாக இருக்கும்... ட்ரை பண்ணுங்க...!
Tomato Upma Recipe: பொதுவாக பெரும்பாலான மக்கள் பார்த்து பயப்படும் ஒரு காலை உணவு என்றால் அது உப்புமாதான். ஆனால் சரியான முறையில் செய்து சரியான சைடிஷ் உடன் சாப்பிடும் போது உப்புமாவும் சிறந்த உணவாகத்தான் இருக்கும். பொதுவாக நாம் உப்புமா செய்யும் போது அதனை வெறும் ரவாவை வைத்து செய்வோம். உப்புமா போரான உணவாக இருக்க இதுவும் ஒரு காரணமாகும்.
தக்காளி உப்புமா என்பது வழக்கமான உப்புமா போல அல்லாமல் தக்காளி சேர்த்து சேர்த்து செய்யப்படும் ஒரு சுவையான தென்னிந்திய காலை உணவாகும். இந்த ஆந்திரா பாணி தக்காளி உப்புமா, தென்னிந்தியாவில் பிரதானமான காலை உணவான உப்புமாவின் மறுவடிவமாகும். காரமான வேர்க்கடலை சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிடும்போது இது சூப்பரான காலை உணவாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் ரவை
- 1 பெரிய வெங்காயம்
- 2 நறுக்கிய தக்காளி
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 1/2 ஸ்பூன் மஞ்சள்
- 1/2 ஸ்பூன் கடலைப் பருப்பு
- 1/2 ஸ்பூன் உளுந்தம் பருப்பு
- 3 பச்சை மிளகாய்
- 10 முந்திரி பருப்பு
- 2 ஸ்பூன் நெய்
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- கறிவேப்பிலை சிறிதளவு
- கொத்தமல்லி சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை:
- ஒரு அகலமான பாத்திரத்தில் 1/2 கப் ரவாவை சேர்த்து வறுக்கவும். மொறுமொறுப்பாகவும் சிறிது நறுமணமாகவும் மாறும் வரை மிதமான தீயில் வறுக்கவும், பழுப்பு நிறமாகாமல் பார்த்துக் கொள்ளவும்.
- வெங்காயம் மற்றும் தக்காளியை தனியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய்யை சூடாக்கவும். நெய் உங்கள் தக்காளி உப்மாவிற்கு ஒரு சிறந்த நறுமணம் மற்றும் சுவையைக் கொடுக்கும்
- பின்னர் ½ கடுகு, ½ டீஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் கடலைப் பருப்பு, 1/2 ஸ்பூன் உளுந்தம் பருப்பு மற்றும் 10 முந்திரி அனைத்தையும் ஒரே நேரத்தில் சேர்த்து வறுக்கவும். பருப்பு வகைகள் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- இப்போது சிறிதளவு கறிவேப்பிலை, 3 நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். 2 நிமிடம் வரை வதக்கவும்
- தக்காளி முற்றிலும் மென்மையாக மாறும் வரை மூடி வைத்து சமைக்கவும். தக்காளியின் சுவையை அதிகரிக்க அதிக தீயில் சில நிமிடங்கள் வதக்கவும். இதன் மூலம் தக்காளி மேலும் சுவையானதாக மாறும்.
- தக்காளி நன்கு கொதித்ததும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி உப்பு சரிபார்க்கவும். தண்ணீர் நன்கு கொதிக்கும் வரை காத்திருக்கவும்.
- நன்கு கொதித்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும். கொதிக்கும் நீரில் ரவையை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டவும். ரவை கட்டியாக மாறாத படி தொடர்ந்து கிளறவும்.
- ரவையில் கட்டி ஏதும் வரவில்லை என்பதை உறுதிப்படுத்தியவுடன் ஒரு மூடி போட்டு பாத்திரத்தை மூடவும். தண்ணீர் நன்கு வற்றியதும் நன்கு கிளறிவிட்டு நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
- சுவையான தக்காளி உப்புமா ரெடி, இதை சூடாக தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமான காலை உணவாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
