Latest Updates
-
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது!
பூரிக்கு அட்டகாசமாக இருக்கும் தக்காளி தொக்கு
இன்று இரவு உங்கள் வீட்டில் பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு எப்போதும் உருளைக்கிழங்கு மசாலா செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் தக்காளியைக் கொண்டு தொக்கு செய்யுங்கள்.
இன்று இரவு உங்கள் வீட்டில் பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு எப்போதும் உருளைக்கிழங்கு மசாலா செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் உங்கள் வீட்டில் தக்காளி நிறைய உள்ளதா? அப்படியானால் அந்த தக்காளியைக் கொண்டு தொக்கு செய்யுங்கள். இந்த தக்காளி தொக்கு பூரிக்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். இதை செய்வது மிகவும் சுலபம்.

உங்களுக்கு தக்காளி தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தக்காளி - 6
* வெங்காயம் - 2
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* சர்க்கரை - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறது
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் தக்காளியை துண்டுகளாக்கி மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அப்படி அரைக்கும் போது அத்துடன் மிளகாய் தூளையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பிறகு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு லேசாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தக்காளியை ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
* பின்னர் குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கினால், சுவையான தக்காளி தொக்கு தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
