Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
தக்காளி வெச்சு மணக்க மணக்க இப்படி ஒருடைம் ரசம் செய்யுங்க.. சப்பு கொட்டி சாப்பிடுவாங்க...
Thakkali Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் மதியம் எப்போதும் ரசம் வைப்பீர்களா? ஒரே மாதிரியான ரசத்தை எப்போதும் செய்வதற்கு பதிலாக, அவ்வப்போது சற்று வித்தியாசமான சுவையில் ரசத்தை செய்தால், சாப்பிட இன்னும் நன்றாக இருக்கும் அல்லவா? அதுவும் உங்கள் வீட்டில் தக்காளி சற்று அதிகமாக இருந்தால், அந்த தக்காளியைக் கொண்டு ரசம் செய்யுங்கள்.
இந்த தக்காளி ரசத்தை செய்தால், குழம்பு கூட வேண்டாம் என்று சொல்வார்கள். முக்கியமாக சப்பு கொட்டி ஊற்றி ஊற்றி குடிப்பார்கள். அந்த அளவில் இந்த ரசம் சுவையாக இருக்கும். இந்த ரசத்தை வைத்து ஏதேனும் வறுவலை செய்தால், இன்னும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு தக்காளி ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தக்காளி - 4
* சுடுதண்ணீர் - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 3/4 டீஸ்பூன்
* பூண்டு - 8 பல் (தட்டிக் கொள்ளவும்)
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* ரசப்பொடி - 1 டேபிள் ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் தக்காளியை இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின் அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அத்துடன் 2 கப் சுடுநீரை ஊற்றி
அடுப்பில் வைத்து, 2-3 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* ஓரளவு சூடு தணிந்ததும், தக்காளியை எடுத்து, ஒரு பாத்திரத்தில்
போட்டு, அதன் தோலை மட்டும் நீக்கிவிட்டு, தக்காளியை கைகளால் நன்கு
பிசைந்து விட்டு, தக்காளி வேக வைத்த நீருடன் சேர்த்து கலந்து கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் புளிச்சாற்றினை 2 டேபிள் ஸ்பூன் ஊற்றி, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் தட்டி வைத்துள்ள பூண்டு பற்கள், பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை, சிறிது கொத்தமல்லி சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் ரசப்பொடியை சேர்த்து முறை மணம் வரும் வரை வதக்கி,
பின் கரைத்த வைத்துள்ள தக்காளி புளி நீரை சேர்த்து, பெருங்காயத் தூள்,
மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, நுரை கட்டி லேசாக கொதிக்க
ஆரம்பித்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, கொத்தமல்லியைத் தூவி
இறக்கினால், சுவையான தக்காளி ரசம் தயார்.



Click it and Unblock the Notifications