Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
3 உருளைக்கிழங்கும், 3 தக்காளியும் வெச்சு ஒருடைம் இந்த குருமாவை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்...
Tomato Potato Kurma Recipe In Tamil: இரவு வேளையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் சப்பாத்தி தான் டின்னராக இருக்குமா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்து அலுத்துவிட்டதா? சற்று வாய்க்கு ருசியாக, அதே சமயம் அசைவ குருமாவை மறக்கடிக்கும் வகையில் ஒரு சூப்பரான சைவ குருமாவை செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் தக்காளியும், உருளைக்கிழங்கும் இருந்தால், அருமையான குருமா செய்யலாம். இந்த குருமா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு தக்காளி உருளைக்கிழங்கு குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி உருளைக்கிழங்கு குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 2 ஸ்பூன்
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 2
* சோம்பு - 1/2
* பட்டை - சிறிய துண்டு
* கல்பாசி - சிறிது
* முந்திரி - 6
* பொட்டுக்கடலை - 1 1/2 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 5 பல்
* சின்ன வெங்காயம் - 8
* தக்காளி - 1 (நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தேங்காய் - 1/4 மூடி
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* அன்னாசிப்பூ - 1
* கல்பாசி - சிறிய துண்டு
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 3 (நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்து துண்டுகளாக்கப்பட்டது)
* குழம்பு மிளகாய் தூள் - 1 3/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், ஏலக்காய், கிராம்பு, பட்டை, சோம்பு, கல்பாசி,
முந்திரி, பொட்டுக்கடலை, கசகசா, இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் சிறிது கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் 1/4 மூடி
தேங்காயை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு 3 உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, நீரை ஊற்றி, 3 விசில்
விட்டு இறக்க வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து,
உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்க வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பட்டை, அன்னாசிப்பூ, கல்பாசி, சோம்பு,
கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, மஞ்சள் தூள்
தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி,
பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கி,
அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 1 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி, குருமாவிற்கு
தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்தால், சுவையான தக்காளி
உருளைக்கிழங்கு குருமா தயார்.



Click it and Unblock the Notifications