Latest Updates
-
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
தக்காளி சட்னி செய்யும் போது இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க.. சட்னி டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...
Tomato Kara Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு சட்னி ஏதாவது செய்ய நினைக்கிறீர்களா? பெரும்பாலும் உங்கள் வீட்டில் இட்லி, தோசைக்கு தக்காளியை சட்னியை செய்வீர்களா? அப்படியானால் இன்று தக்காளி சட்னி செய்யும் போது, அத்துடன் ஒரு பொருளை மட்டும் எக்ஸ்ட்ரா சேர்த்துக்கொள்ளுங்கள்.
தக்காளி சட்னியின் சுவையே வேற லெவலில் இருக்கும். மேலும் இந்த ஸ்டைல் தக்காளி சட்னியை ஒருமுறை வீட்டில் செய்தால், அடிக்கடி செய்வீர்கள். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். செய்வதற்கும் மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு தக்காளி கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 7
* பூண்டு - 3 பல்
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 5 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பொட்டுக்கடலை - 50 கிராம்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நிறம் மாற
வதக்க வேண்டும்.
* பின் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு தக்காளியை சேர்த்து, சுவைகேற்ப உப்பு தூவி, ஒருமுறை கிளறி,
மூடி வைத்து 3-4 நிமிடம் தக்காளியை வேக வைக்க வேண்டும்.
* 4 நிமிடம் ஆனதும், மூடியை திறந்தால் தக்காளி நன்கு மென்மையாக
வெந்திருக்கும். பின் அடுப்பை அணைத்துவிட்டு, அதில் பொட்டுக்கடலையை
சேர்த்து கிளறி, குளிர வைக்க வேணடும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, நீர்
சேர்க்காமல் அப்படியே மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு,
தாளிப்பதற்கு ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான தக்காளி கார சட்னி
தயார்.
Image Courtesy: Spice Up The Curry



Click it and Unblock the Notifications
