Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும்
தக்காளியும், பூண்டும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் ஸ்பெஷல் சட்னி செய்யுங்க...இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்!
Andhra Style Tomato Garlic Chutney Recipe in Tamil: இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னிகள் அரைத்து போரடித்து விட்டதா? புதுசா ஏதாவது சைடிஷ் செய்ய ஆசைப்படுறீங்களா? அப்ப நம்ம அக்கட தேசமான ஆந்திரா ஸ்டைல் சைடிஷ்களை ட்ரை பண்ணி பாருங்க. வழக்கமான சட்னிகளுக்கு மாற்றாக சற்று காரமான அதே சமயம் புளிப்பான சட்னியை செய்ய வேண்டுமா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் தக்காளி பூண்டு சட்னியை ட்ரை செய்து பாருங்கள். இந்த சட்னி வழக்கமாக செய்யும் தக்காளி சட்னியை விட சற்று வித்தியாமான சுவையில் இருக்கும். இதை சட்னியாக மட்டுமின்றி ஊறுகாயாக சாதத்துடன் வைத்து சாப்பிடலாம்.
இந்த தக்காளி பூண்டு சட்னி அல்லது தொக்கு தக்காளி, பூண்டு மற்றும் வீட்டிலுள்ள எளிய பொருட்களையும் வைத்து தயாரிக்கப்படுகிறது. இந்த சட்னி செய்வதற்கு மிகவும் எளிமையாக இருப்பதோடு சுவையாகவும் இருக்கும். ஒருமுறை இந்த சட்னியை செய்து காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து விட்டால் அதை நீண்ட நாட்கள் வைத்து சாப்பிடலாம்.

இந்த சட்னியை ஒருமுறை செய்து விட்டால் அதன்பிறகு அடிக்கடி செய்யத் தொடங்கிவிடுவீர்கள். இந்த பதிவில் சுவையான ஆந்திரா ஸ்டைல் தக்காளி பூண்டு சட்னி அல்லது ஊறுகாயை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைக்க:
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் வெந்தயம்
சமைக்க தேவையானவை:
- அரை கிலோ பழுத்த தக்காளி
- 15 பூண்டு பல்
- 50 கிராம் புளி
தாளிக்க:
- 4 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 3 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 20 பூண்டு பல்
- உடைத்த வெல்லம் - சிறிதளவு
- 1 ஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள்
- உப்பு தேவையான அளவு
செய்முறை:
- கடுகு மற்றும் வெந்தயத்தை மிதமான தீயில் வறுத்து, ஆற வைத்து, பின்னர் பொடியாக அரைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில், பழுத்த தக்காளி, புளி மற்றும் பூண்டு ஆகியவற்றை மூடி வைத்து, தக்காளி மென்மையாக மாறும் வரை எண்ணெய் அல்லது தண்ணீர் சேர்க்காமல் வேகவைக்கவும். இது ஆறியதும் மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, கடுகு சேர்த்து வதக்கவும்.
- பின்னர் வர மிளகாய், கறிவேப்பிலை, 20 பல் பூண்டு சேர்த்து,
பூண்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
தீயைக் குறைத்து, பின்னர் விரைவாக காஷ்மீரி மிளகாய்த் தூள் மற்றும்
மிளகாய்த் தூளைச் சேர்த்துக் வதக்கவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து, அரைத்த தக்காளி விழுதை இதில் கொட்டி கொதிக்க வைக்கவும்.
- பின்னர் தேவையான அளவு உப்பு, அரைத்த கடுகு-வெந்தயப் பொடி, உடைத்த வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்து, கலவை கெட்டியாகி, தொக்கு பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும்.
- எண்ணெய் பிரிந்து தனியாக வரும் வரை நன்கு கிளறவும்.
- இதை சூடாகவும் சாப்பிடலாம், இல்லையெனில் நன்கு குளிர வைத்து காற்று புகாத கொள்கலனில் சேமிக்கவும்.
- இது இட்லி, தோசையுடன் சாப்பிட மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications