Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும்
Tomato Chicken Gravy Recipe in Tamil: இந்த வார சண்டே அன்று உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கி சமைக்கப் போகிறீர்களா? அதுவும் காலையில் தோசை, சப்பாத்தி அல்லது பூரிக்கு சிக்கன் கிரேவி செய்து சாப்பிட திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் ஒரே மாதிரி சிக்கன் கிரேவியை செய்யாமல், ஒருமுறை இந்த நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவியை செய்து பாருங்கள்.

இந்த வித்தியாசமான சிக்கன் கிரேவி பூரி, சப்பாத்தியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த மாதிரி சிக்கன் கிரேவியை செய்தால், பின் உங்கள் வீட்டில் உள்ளோர் எப்போதும் இந்த மாதிரி தான் சிக்கன் கிரேவியை செய்ய சொல்வார்கள். குறிப்பாக இந்த சிக்கன் கிரேவி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவையில் இருக்கும். இன்று உங்கள் வீட்டில் உள்ளோரை அசத்த நினைத்தால், இந்த கிரேவியை செய்து கொடுங்கள்.
உங்களுக்கு நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 ஸ்பூன் நெய்
- 3 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் சீரகம்
- 3 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 கிலோகிராம் எலும்புடன் கூடிய சிக்கன்
- 4 பச்சை மிளகாய் (இரண்டாக கீறியது)
- 2 கப் அரைத்த தக்காளி
- ½ கப் வறுத்த வெங்காயம்
- 3 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- தேவையான அளவு உப்பு
- ½ தேக்கரண்டி கரம் மசாலா தூள்
- 2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
செய்முறை:
- முதலில் ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி அதை எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்னர் அதை தனியாக எடுத்து வைக்கவும்.
- அடி கனமான ஒரு பாத்திரத்தில், மிதமான தீயில் நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும், சீரகம் சேர்த்து, அதை பொரிய விடவும்.
- பின்னர் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து தாளிக்கவும். இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்னர் கழுவி வைத்த சிக்கனைச் சேர்த்து, அதிகத் தீயில் 3-4 நிமிடங்கள் சமைக்கவும். இடையிடையே அடிக்கடி கிளறவும்.
- பின்னர் கீறிய பச்சை மிளகாய், அரைத்த தக்காளி, மொறுமொறுப்பாக வறுத்த வெங்காயம், காஷ்மீரி மிளகாய்த்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாகக் கிளறவும்.
- பாத்திரத்தை மூடி வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து சிக்கனை வேக வைக்கவும்.
- சிக்கன் மென்மையாகும் வரை கிட்டதட்ட 30 நிமிடம் வேக வைக்கவும். கிரேவி அடிபிடிக்காமல் இருக்க இடையிடையே கிளறி விடவும்.
- சிக்கனே தண்ணீர் வெளியிடும் என்பதால் கூடுதல் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
- பின்னர் கரம் மசாலா தூள் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சட்னியை சேர்த்து நன்றாக கிளறவும்.
- உப்பின் அளவைச் சரிபார்த்து, தேவைப்பட்டால் மேலும் சேர்க்கவும். அவ்வளவுதான் சுவையான தக்காளி சிக்கன் ரெடி. இதை சப்பாத்தி, தோசை அல்லது சாதத்துடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications