Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
Tirupati Laddu: திருப்பதி லட்டுவை வீட்டிலேயே ஈஸியா செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
Tirupati Laddu Recipe In Tamil: திருப்பதி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது லட்டு தான். இந்த லட்டு வாயில் வைத்ததுமே கரையக்கூடிய வகையில் மிகவும் அற்புதமான சுவையுடன் இருக்கும். இப்படிப்பட்ட திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு கலந்திருப்பதாக ஆய்வு ஒன்றில் உறுதி செய்யப்பட்டு தற்போது பேரதிர்ச்சியை அளித்துள்ளது. நீங்கள் இந்த லட்டு சாப்பிடுவதற்காகவே அடிக்கடி திருப்பதி செல்வீர்களா? அப்படியானால் இந்த லட்டுவை நீங்கள் உங்கள் வீட்டிலேயே தேவையான அளவு செய்து சாப்பிடலாம்.
உங்களுக்கு திருப்பதி லட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே திருப்பதி லட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* கடலை மாவு - 400 கிராம்
* நெய் - 1 லிட்டர்
* சர்க்கரை - 350 கிராம்
* பாதாம் - 50 கிராம்
* முந்திரி - 100 கிராம்
* உலர் திராட்டை - 50 கிராம்
* கற்கண்டு - 20 கிராம்
* ஏலக்காய் - 10 கிராம்
* பால் - 300 மிலி
* அரிசி மாவு - 100 கிராம்
* சர்க்கரை - 400 கிராம்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 100 கிராம் சர்க்கரை மற்றும் பாலை
ஒன்றாக எடுத்து, சர்க்கரையை முழுமையாக கரைய விட வேண்டும்.
* சர்க்கரை கரைந்த பின், அதில் அரிசி மாவை சேர்த்து கட்டிகளின்றி
கரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டிகள்
சேராதவாறு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* கலவையானது மிகவும் கெட்டியாக இருந்தால், அதில் சிறிது பாலை ஊற்றி,
ஓரளவு கெட்டியாக கரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
ஈரப்பதமில்லாத ஒரு சல்லடை கரண்டியை எடுத்து, வாணலியின் மேலே வைத்து
பிடித்து, அதில் கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி பொன்னிற பூந்திகளாக
பொரித்து, ஒரு அகலமான தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே நெய்யில் முந்திரி, பாதாம் ஆகியவற்றை சேர்த்து ப்ரை செய்து
அதையும் ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு உலர் திராட்சையை சேர்த்து கருகவிடாமல் ப்ரை செய்து எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் பாதி பூந்தியை சேர்த்து சற்று கொரகொரவென்று
அரைத்து, மீதமுள்ள பூந்தியுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து சர்க்கரை பாகு செய்ய, ஒரு பாத்திரத்தில் 250-300 கிராம்
சர்க்கரையை எடுத்து, சர்க்கரை மூழ்கும் அளவில் நீரை ஊற்றி அடுப்பில்
வைத்து, சர்க்கரை கரைந்ததும், ஏலக்காயை தட்டிப் போட்டு, கம்பி
பதத்திற்கு வந்தும், அந்த சர்க்கரை பாகுவை பூந்தியுடன் சேர்த்து,
அத்துடன் வறுத்த முந்திரி, பாதாம், உலர் திராட்சையை சேர்த்து, சிறிது
நெய் ஊற்றி நன்கு கிளறி விட்டு, 2 நிமிடம் அப்படியே சிறிது நேரம் ஊற
வைக்க வேண்டும்.
* இறுதியாக ஓரளவு சூடாக இருக்கும் போதே, அவற்றை லட்டுகளாக பிடித்து
வைத்தால், திருப்பதி லட்டு தயார்.
Image Courtesy: Mithaicana



Click it and Unblock the Notifications