Latest Updates
-
15 நிமிடத்தில் இட்லி குருமா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
அக்டோபர் 06 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஏமாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் இறுதியில் நடக்கும் குரு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசியின் பலமும்,பணமும் அதிகரிக்கப்போகுதாம் -
ஹோட்டல் ஸ்டைல் முந்திரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - அருமையா இருக்கும் -
இந்த ஒரு பொடியை அரைச்சு வெச்சுக்கோங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது! -
Mahalaya Amavasya 2026:மகாளய அமாவாசை எப்போது வருகிறது? இந்த நாளில் இறந்தவர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் -
உங்க முகம் உடனடியாக பளீச்சுன்னு மாறணுமா? அப்ப ரோஜாப்பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
விமானத்தை ஓட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வினோதமான உணவுமுறை பழக்கம் என்ன தெரியுமா? -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல உங்க பிள்ளைகளுக்கு இத செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..
டிபன் கடை ஸ்டைல் கருப்பு உளுந்து சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
Tiffin Kadai Style Karuppu Ulunthu Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி தான் சுடப் போகிறீர்களா? அதற்கு இன்னும் என்ன சைடு டிஷ் செய்வதென்று முடிவெடுக்காமல் உள்ளீர்களா? சற்று வித்தியாசமான சட்னியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் கருப்பு உளுந்து கொண்டு டிபன் கடை ஸ்டைல் கருப்பு உளுந்து சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். முக்கியமாக இந்த சட்னி சத்தானதும் கூட. அடிக்கடி இதை செய்து சாப்பிடும் போது எலும்புகள் வலுவடையும்.

உங்களுக்கு இந்த டிபன் கடை ஸ்டைல் கருப்பு உளுந்து சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே டிபன் கடை ஸ்டைல் கருப்பு உளுந்து சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 6 (காரத்திற்கு ஏற்ப)
* கருப்பு உளுந்து - 4 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 4-5 பல்
* சின்ன வெங்காயம் - 6
* தக்காளி - 3 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வரமிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே எண்ணெயில் கருப்பு உளுத்தம் பருப்பை சேர்த்து நல்ல மணம்
வரும் வரை வறுக்க வேண்டும்.
* அடுத்து அதில் கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்கி,
ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் அதே வாணலியில் உள்ள எண்ணெயில் தக்காளியை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்துக் கொண்டு, ஜாரில்
நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்க்க வேண்டும். இந்த சட்னியானது ஓரளவு
நீராக இருந்தால் நன்றாக இருக்கும்.
* இறுதியாக சட்னி தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை,
வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான
டிபன் கடை ஸ்டைல் கருப்பு உளுந்து சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
