Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
90'ஸ் கிட்ஸ் பெட்டி கடையில் வாங்கி சாப்பிட்ட இந்த ஸ்வீட்டை ஒரு டைம் வீட்டுல ட்ரை பண்ணி பாருங்க...
Thirupagam Sweet Recipe In Tamil: மாலை வேளையில் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு நல்ல சுவையான, அதே சமயம் அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு ஏதாவது ஒரு ஸ்வீட் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் 90'ஸ் கிட்ஸ்கள் விரும்பி சாப்பிட்ட ஒரு ஸ்வீட்டை வீட்டில் செய்து உங்கள் பிள்ளைகளுக்கு கொடுங்கள். அது தான் திருப்பாகம்.
இது 90-களில் பெட்டிக்கடைகளில் அதிகம் விற்கப்படும் ஒரு ஸ்வீட். வாயில் வைத்ததும் கரையக்கூடிய வகையில் அற்புதமாக இருக்கும். இந்த ஸ்வீட் திருநெல்வேலியில் மிகவும் பிரபலமானது. நீங்கள் 90-களில் பிறந்ததிருந்தால், நிச்சயம் இந்த ஸ்வீட்டை சுவைத்திருப்பீர்கள்.

உங்களுக்கு திருப்பாகம் ஸ்வீட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே திருப்பாகம் ஸ்வீட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முந்திரி - 50 கிராம்
* கடலை மாவு - 1/2 கப்
* பால் - 1/2 கப் + 1 டேபிள் ஸ்பூன்
* சர்க்கரை - 1 கப்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்+1 டேபிள் ஸ்பூன்+ 1 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் பொடி - சிறிது
செய்முறை:
* முதலில் ஈரமில்லாத ஒரு மிக்சர் ஜாரில் முந்திரி பருப்பை சேர்த்து
லேசாக ஒருமுறை பொடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலை மாவை சேர்த்து
நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதில் 1/2 கப் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பாலை ஊற்றி
கட்டிகளின்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த வாணலியை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து,
தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் சர்க்கரையை சேர்த்து கிளற வேண்டும். சர்க்கரை கரைந்ததும்,
1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு கிளறிவிட வேண்டும். பின் மீண்டும் 1
டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி விட வேண்டும். இப்படி 3
நிமிடத்திற்கு இதை சேர்த்து கிளற வேண்டும்.
* பிறகு அதில் ஏலக்காய் தூள் மற்றும் முந்திரி பொடியை சேர்த்து 2
நிமிடம் கிளறி விட வேண்டும். ஒரு அல்வா பதத்திற்கு வதந்ததும், அதை
இறக்கி விட வேண்டும்.
* பின்பு அதை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளலாம். இல்லாவிட்டால்
பட்டர் பேப்பரில் கொஞ்சம் கொஞ்சமாக வைத்து மடித்துக் கொள்ளலாம். இந்த
ஸ்வீட்டை வெளியே வைத்தே சாப்பிடலாம். ஒரு வாரம் வரை நன்றாக
இருக்கும்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications
