Latest Updates
-
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
1 கப் தேங்காயும், 2 ஸ்பூன் உளுத்தம் பருப்பும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
Thengai Ulunthu Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யப் போகிறீர்களா? அதற்கு சிம்பிளாகவும், அதே வேளையில் செய்வதற்கு சுலபமாகவும் ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் இதுவரை நீங்கள் செய்திராத சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா?
உங்கள் வீட்டில் 1 கப் துருவிய தேங்காயும், 2 ஸ்பூன் உளுத்தம் பருப்பும் இருந்தால், அதைக் கொண்டு அற்புதமான சுவையில் சட்னியை செய்யுங்கள். அது தான் தேங்காய் உளுந்து சட்னி தயார். இந்த சட்னி நீங்கள் இதுவரை செய்திராத அளவில் வித்தியாசமான சுவையுடன் இருக்கும். ஒருமுறை இந்த சட்னியை செய்தால், பின் அடிக்கடி செய்வீர்கள்.

உங்களுக்கு தேங்காய் உளுந்து சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் உளுந்து சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 7-8 பல்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* புளி - 1 சிறிய துண்டு
* துருவிய தேங்காய் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், 7-8 பல் பூண்டு சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க
வேண்டும்.
* அடுத்து அதில் பச்சை மிளகாய் சேர்த்து வெள்ளையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, புளி சேர்த்து நன்கு வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, துருவிய
தேங்காய் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி,
சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்து, சிறிது நீரை
ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு 2
டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 1/2 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு, 1 கொத்து கறிவேப்பிலை மற்றும் 1 வரமிளகாயை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான தேங்காய் உளுந்து
சட்னி தயார்.



Click it and Unblock the Notifications