Just In
- 2 hrs ago
சர்க்கரை நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
- 2 hrs ago
மிதுனம் செல்லும் புதனால் அடுத்த 15 நாட்கள் இந்த ராசிகளுக்கு செம சூப்பரா இருக்கப் போகுது...
- 3 hrs ago
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் அப்பாவிகளாக இருப்பார்களாம்... இவங்கள சமாளிப்பது ரொம்ப கஷ்டமாம்!
- 4 hrs ago
ஜூலை மாதம் உங்க ஆரோக்கியம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஆபத்து அதிகமாம்...!
Don't Miss
- Finance
ஒரே நேரத்தில் 8000 பேருக்கு பதவி உயர்வு: ஆச்சரியத்தில் தலைமை செயலக பணியாளர்கள்
- News
என் கேரக்டரே இது தான்! எதைப்பற்றியும் கவலைப்படும் ஆள் நானில்லை -அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
- Movies
Rocketry public Review : யார் இந்த நம்பி நாராயணன்?.. மாதவனுக்கு குவியும் பாராட்டு!
- Sports
எனக்கே ஸ்கெட்ச்சா?? இங்கிலாந்து அணியை அலறவிட்ட டிராவிட்.. இந்திய ப்ளேயிங்11ல் இதை கவனித்தீர்களா??
- Technology
iPhone வச்சிக்கிட்டு ஓவர்-சீன் போடுறாங்களா? "இதை" சொல்லுங்க.. அடங்கிடுவாங்க!
- Automobiles
முன்பதிவு தொடங்கியது... இந்த காருக்காகதான் இந்தியாவே வெயிட்டிங்.... இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ருசியான... தேங்காய் பால் புளிக்குழம்பு
நீங்கள் புளிக்குழம்பு பிரியரா? உங்களுக்கு சாதத்துடன் புளிக்குழம்பு சேர்த்து சாப்பிட ரொம்ப பிடிக்குமா? அப்படியடினால் இதுவரை நீங்கள் பல வெரைட்டி புளிக்குழம்புகளை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் தேங்காய் பால் புளிக்குழம்பு செய்து சுவைத்ததுண்டா? உங்களுக்கு தேங்காய் பால் புளிக்குழம்பு எப்படி செய்வதென்று தெரியுமா? இல்லையென்றால் இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் கீழே தேங்காய் பால் புளிக்குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* சின்ன வெங்காயம் - 10
* பூண்டு - 10 பல்
* குழம்பு மசாலா பவுடர் - 2-4 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம்/சர்க்கரை - 1 டீஸ்பூன்
* புளி - 1 சிறு எலுமிச்சை அளவு
* கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
செய்முறை:
* முதலில் புளியை நீரில் ஊற வைத்து, பிசைந்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு உப்பு, குழம்பு மிளகாய் பவுடர் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் புளிச்சாறு, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து கிளறி குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் தேங்காய் பால் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான தேங்காய் பால் புளிக்குழம்பு தயார்.
Image Courtesy: yummytummyaarthi