Latest Updates
-
வார ராசிபலன் (28 June 2026-04 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு பண கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது..! -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த சோள மாவு ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சன்டே ஸ்பெஷல் ஹனி கார்லிக் சிக்கன் - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா? -
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி! -
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
தேங்காய் மிளகாய் பொடி
தேங்காய் மிளகாய் பொடி செய்து சுவைத்ததுண்டா? ஆம், இந்த தேங்காய் மிளகாய் பொடி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
நீங்கள் பொடி பிரியரா? இதுவரை நீங்கள் இட்லி பொடி செய்து சுவைத்திருப்பீர்கள். இந்த இட்லி பொடியை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் தேங்காய் மிளகாய் பொடி செய்து சுவைத்ததுண்டா? ஆம், இந்த தேங்காய் மிளகாய் பொடி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். உங்களுக்கு தேங்காய் மிளகாய் பொடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே தேங்காய் மிளகாய் பொடியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துருவிய தேங்காய் -1 கப்
* உளுத்தம் பருப்பு - 1/4 கப்
* வரமிளகாய் - 10-15
* கடுகு - 1 டீஸ்பூன்
* பூண்டு - 3
* புளி - 1 சிறிய துண்டு
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வெல்லம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு சேர்த்து லேசாக நிறம் மாற ஆரம்பிக்கும் போது, கடுகு, வரமிளகாய், பூண்டு, பெருங்காயத் தூள் மற்றும் புளி சேர்த்து, மிதமான தீயில் வைத்து நன்கு பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் துருவிய தேங்காயை சேர்த்து குறைவான தீயில் வைத்து, அதில் உள்ள நீர் அனைத்தும் வற்றும் வரை வறுத்து இறக்கி, அதையும் குளிர வைக்க வேண்டும்.
* பின்பு வறுத்த பொருட்களுள் தேங்காயைத் தவிர அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் தேங்காய், வெல்லம் சேர்த்து, ஒருமுறை லேசாக அரைத்து இறக்கிவிட வேண்டும். (அதிகமாக அரைத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் அது பிசுபிசுவென்று மாறிவிடும்.)
* இப்போது அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறினால், தேங்காய் மிளகாய் பொடி தயார். இந்த பொடியை காற்றுப்புகாத ஜாரில் போட்டு சேமித்து வைத்து பயன்படுத்துங்கள்.
Image Courtesy: asmallbite



Click it and Unblock the Notifications
