Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும்
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. அடுப்பே இல்லாம இட்லி, தோசைக்கு அருமையான சைடு டிஷ் செய்யலாம்..
Thenga Poondu Podi Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி காலையில் இட்லி, தோசை செய்வீர்களா? அந்த இட்லி, தோசைக்கு எப்பவும் சட்னி, சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? சற்று சிம்பிளாகவும், அதே சமயம் ருசியான ஒரு சைடு டிஷ்ஷை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு இட்லி பொடி பிடிக்குமா?
அப்படியானால் அந்த இட்லி பொடியை விட ஒரு அருமையான மற்றும் வெறும் 3 பொருட்களைக் கொண்டே செய்யக்கூடிய பொடியை 5 நிமிடத்தில் செய்யுங்கள். அது தான் தேங்காய் பூண்டு பொடி. இந்த பொடி ரெசிபியை பிரபல செஃப் தீனதயாளன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதுவும் இந்த தேங்காய் பூண்டு பொடியை இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, புளித்த தோசை மாவு இருந்தால், அதைக் கொண்டு ஊத்தாப்பம் செய்தும் சாப்பிடலாம்.

உங்களுக்கு இந்த தேங்காய் பூண்டு பொடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செஃப் தீனதயாளன் பகிர்ந்து கொண்ட தேங்காய் பூண்டு பொடியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கொப்பரை தேங்காய் - 3
* மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப
* முழு பூண்டு - 3
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - தேவையான அளவு
ஊத்தாப்பத்திற்கு...
* புளித்த தோசை மாவு - தேவையான அளவு
* வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 2 கொத்து
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கொப்பரை தேங்காயை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் நறுக்கிய கொப்பரை தேங்காயை சேர்த்து, அத்துடன்
காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூளை சேர்த்து, தேங்காயை நன்கு துருவியது
போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு பற்களை தோலோடு சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து அரைத்தால், சுவையான தேங்காய் பூண்டு பொடி தயார்.
* அடுத்து வீட்டில் புளித்த தோசை மாவு இருந்தால், அத்துடன் பொடியாக
நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சீரகம், வரமிளகாய் மற்றும் நறுக்கிய கறிவேப்பிலை
சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை ஊத்தாப்பம் போன்று ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி முன்னும்
பின்னும் வேக வைத்து எடுத்தால், ஊத்தாப்பம் தயார்.
* இந்த வெங்காய ஊத்தாப்பத்திற்கு அரைத்த தேங்காய் பூண்டு பொடியில்
நல்லெண்ணெய் ஊற்றி தொட்டு சாப்பிட்டால், சுவை மிகவும் பிரமாதமாக
இருக்கும்.



Click it and Unblock the Notifications
