சனி பகவான் வக்ரமடைவதால் இன்று முதல் எந்த ராசிக்கு சூப்பராகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா?

Shani Vakri 2026 Saturn Retrograde In Pisces On 27 July: வேத ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான், ஒழுக்கம், நீதி, நேர்மை, பொறுப்பு ஆகியவற்றின் காரணியாவார். நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். அதாவது இவர் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். மேலும் அவ்வப்போது வக்ர நிலையிலும் பயணிப்பார். இப்படி சனி பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

Shani Vakri 2026 Saturn Retrograde In Pisces On 27 July List Of Lucky And Unlucky Zodiac Signs

அந்த வகையில் தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூலை 27 ஆம் தேதி வக்ர நிலையில் பின்னோக்கி பயணிக்கவுள்ளார். இந்த நிலையில் டிசம்பர் 11 ஆம் தேதி வரை இருந்து, பின் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கவுள்ளார். சுமார் 138 நாட்களுக்கு சனி பகவான் வக்ர நிலையில் இருக்கப் போகிறார்.

ஜோதிடத்தில், சனியின் வக்ர நிலை என்பது சுயபரிசோதனை, முடிக்கப்படாத பணிகளை மீளாய்வு செய்தல், பொறுப்புகளை நிறைவேற்றுதல் மற்றும் ஒருவரின் செயல்களின் விளைவுகளைப் பற்றி சிந்திப்பதற்கான காலமாக கருதப்படுகிறது. சனி பகவானின் இந்த வக்ர நிலையின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும். அதில் சிலருக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது சனி வக்ரமாவதால் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

சனி வக்ரமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

ரிஷபம்

ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். ஒவ்வொரு முயற்சியிலும் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். அனுபவசாலிகளின் ஆலோசனையும், ஆதரவும் பயனுள்ளதாக இருக்கும். நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, வேலை மாற்றம் அல்லது புதிய பொறுப்புக்கள் போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. இருந்தாலும், இக்காலத்தில் எந்த ஒரு முக்கியமான முடிவுகளையும் அவசரப்பட்டு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.

மகரம்

மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த மகர ராசியின் 3 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகிறார். இதன் காரணமாக நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் படிப்படியாக நடக்க ஆரம்பிக்கும். பணியிடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். இக்காலத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரலாம். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசியின் அதிபதியும் சனி பகவான். இந்த கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாகும். பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். அலுவலகத்தில் புதிய திட்டங்களில் பணிபுரிந்து வந்தால், அதில் முன்னேற்றத்தைக் காண்பதற்கான வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.

சனி வக்ரமாவதால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

கடகம்

கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் செலவுகள் அதிகரிக்கும். இதன் மூலம் மன அழுத்ததும் அதிகரிக்கும். குடும்பத்திற்கும் வேலைக்கும் இடையே சமநிலையைப் பேணுவது மிகவும் முக்கியம். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வரவு செலவுத் திட்டத்தைப் பின்பற்றுவது நிதி ரீதியாகப் பயனளிக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் சற்று பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். எதிலும் அவசரப்பட்டு முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் ஏற்படும் சிறிய பிரச்சனைகளுக்கு எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக, நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. அமைதியான மனப்பான்மையும் நன்கு திட்டமிடப்பட்ட அணுகுமுறையும் எதிர்காலத்தில் நேர்மறையான பலன்களைத் தரும்.

மீனம்

மீன ராசியின் முதல் வீட்டில் சனி பகவான் வக்ரமாகிறார். இதனால் இதன் தாக்கம் மீன ராசிக்காரர்களின் வாழ்வில் வலுவாக தெரியும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். வேலைப்பளு அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. எந்தவொரு பெரிய நிதி அல்லது தொழில் ரீதியான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்வது அவசியம். பொறுமையையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடிப்பது நன்மை பயக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion