Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
1 கப் தயிரும், சேமியாவும் இருந்தா இந்த வித்தியாசமான டிபனை செஞ்சு பாருங்க... டெஸ்ட் வேற லெவலில் இருக்கும்...!
Thayir Semiya Recipe in Tamil: சேமியா என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது உப்புமாதான். தோசை மாவு இல்லாத நேரங்களில் சேமியாதான் அவசரத்துக்கு கைகொடுக்கும். ஆனால் சேமியாவை வைத்து உப்புமா மட்டும்தான் செய்ய முடியுமா என்றால் நிச்சயம் இல்லை. சேமியாவை தயிருடன் சேர்த்து அட்டகாசமான டிபனை செய்யலாம்.
இந்த ஈஸியான டிபனை செய்வதற்கு ஒரு கப் தயிரும், ஒரு பாக்கெட் சேமியாவும் இருந்தா போதும் 10 நிமிடத்தில் செய்து விடலாம். இந்த தயிர் சேமியா செய்வதற்கு எளிதாக இருப்பதுடன் சாப்பிட சுவையாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இதை டிபனாக மட்டுமின்றி மதிய உணவாகவும் சாப்பிடலாம்.

உங்களுக்கு தயிர் சேமியா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தயிர் சேமியாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படிதது செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 பாக்கெட் சேமியா
- ½ கப் மாதுளை விதைகள்
- 2 கப் புளிக்காததயிர்
- ½ கப் பால்
- 1 ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி
- 2 பச்சை மிளகாய்
- 10 முந்திரி பருப்பு
- 10 உலர் திராட்சை
- கால் ஸ்பூன் கடுகு
- கால் ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 ஸ்பூன் கடலைப் பருப்பு
- 1 ஸ்பூன் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- சிறிதளவு கறிவேப்பிலை
- சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை:
- முதலில் இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, மற்றும் முந்திரியை நறுக்கி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும், பின்னர் மாதுளம் பழத்தை உரித்து மாதுளை விதைகளை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி அதை ஆடை வரும் வரை சுட வைத்து பின்பு அடுப்பை அணைத்து இறக்கி வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.
- பின்னர் ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சேமியாவை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கொதிக்க விடவும்.
- தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அதில் சேமியாவை போட்டு பிறகு ஒரு மூடி போட்டு அதை சுமார் 2 நிமிடம் வேக விடவும்.
- அடுப்பை அணைத்து விட்டு தண்ணீர் சூட்டிலேயே சேமியாவை சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வேக விடவும்.
- 3 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து ஒரு கரண்டியின் மூலம் சேமியாவை எடுத்து பச்சை தண்ணீரில் போட்டு பின்பு தண்ணீரை நன்கு வடித்து சேமியாவை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சூடான பின் அதில் கடுகை போட்டு கடுகு வெடித்தவுடன் அதில் சீரகத்தை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.
- அரை நிமிடத்திற்கு பிறகு அதில் உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பை போட்டு நிறம் மாறும் வரை அதை வறுக்கவும்.
- உளுத்தம் பருப்பு லேசாக நிறம் மாறியதும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை போட்டு இஞ்சியின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
- பின்னர் நறுக்கி வைத்திருக்கும் முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சையை போட்டு முந்திரி பருப்பு லேசாக நிறம் மாறும் வரை அதை வறுக்கவும்.
- முந்திரி பருப்பு நிறம் மாறியதும் அதில் கறிவேப்பிலையை போட்டு அதை நன்கு கலந்து விட்டு இறக்கி வைத்து விடவும்.
- ஒரு பாத்திரத்தில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் சேமியாவை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
- பின்னர் அதில் தயிரை ஊற்றி அதை பக்குவமாக நன்கு கலந்து விடவும்.
- சேமியாவில் தயிரை ஊற்றி கிளறி விடும் போதே அதில் கொஞ்சம் கொஞ்சமாக பாலையும் சேர்த்து கலந்து விடவும்.
- பின்பு அதில் நாம் வறுத்து வைத்திருக்கும் உளுத்தம் பருப்பு மற்றும் முந்திரி பருப்பு கலவையை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- கடைசியாக அதில் மாதுளை விதைகள் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு கலந்து விட்டு இறக்கினால் தயிர் சேமியா ரெடி. இதை அப்போதே சாப்பிடலாம் இல்லையெனில் சுமார் ஒரு மணி நேரம் ப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் இன்னும் சூப்பாரா இருக்கும்.



Click it and Unblock the Notifications