Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
தட்டுக்கடை அவிச்ச முட்டை ஆம்லெட் - இத 1 சாப்பிட்டாலும் வயிறு சும்மா கும்மு-ன்னு இருக்கும்...
Thattu Kadai Avicha Muttai Omelette Recipe In Tamil: உங்கள் வீட்டில் குழந்தைகள் சரியாக சாப்பிடுவதில்லையா? ஆனால் முட்டையை விரும்பி சாப்பிடுவார்களா? முக்கியமாக நீங்கள் டயட்டில் இருக்கிறீர்களா? அதிகமாக சாப்பிடமாட்டீர்களா? அப்படியானால் இத்தகையவர்களுக்கு முட்டையை வைத்து ஒரு அருமையான தட்டுக்கடை ஸ்பெஷல் ரெசிபி ஒன்று உள்ளது. அது தான் தட்டுக்கடை அவிச்ச முட்டை ஆம்லெட்.
இந்த ஆம்லெட் வழக்கமாக செய்யும் ஆம்லெட் போன்று தான் இருக்கும். ஆனால் ஒரு வித்தியாசம், ஒரு ஸ்பெஷல் முட்டை மசாலாவை செய்து, ஆம்லெட் மேல் வைக்க வேண்டும். இந்த தட்டுக்கடை அவிச்ச முட்டை ஆம்லெட்டை ஒன்று சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும். குறிப்பாக காலையில் இது ஒரு சிறந்த காலை உணவாக இருக்கும். இரவு நேரத்திலும் டயட்டில் இருப்போருக்கு சிறந்த டின்னராக இருக்கும்.

உங்களுக்கு தட்டுக்கடை அவிச்ச முட்டை ஆம்லெட் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தட்டுக்கடை அவிச்ச முட்டை ஆம்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலாவிற்கு...
* வேக வைத்த முட்டை - 1
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சில்லி ப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சிக்கன் 65 மசாலா - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
ஆம்லெட்டுக்கு...
* முட்டை - 1
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* பால் - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் வேக வைத்த முட்டையை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயத்தை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் சில்லி ப்ளேக்ஸ், மஞ்சள் தூள், சிக்கன் 65 மசாலா, கரம்
மசாலா சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு தக்காளியை வேக வைக்க
வேண்டும்.
* பின்பு அதில் வெட்டி வைத்துள்ள முட்டை மற்றும் சிறிது கொத்தமல்லியை
தூவி 1 நிமிடம் கிளறி இறக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பௌலில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் உப்பு,
மிளகுத் தூள் மற்றும் பால் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, அதன் மேல் வதக்கி
வைத்துள்ள முட்டை மசாலாவை பரப்பி, சில நொடிகள் கழித்து, முட்டையை
திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்தால், சுவையான தட்டுக்கடை அவிச்ச
முட்டை ஆம்லெட் தயார்.



Click it and Unblock the Notifications





