Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
தஞ்சாவூர் ஸ்டைல் கத்திரிக்காய் கொத்சு ரெசிபி... இப்படி செஞ்சு பாருங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்...!
Thanjavur Kathirikai Gothsu Recipe in Tamil: கத்தரிக்காய் பலருக்கும் பிடிக்காத காய்கறிகளில் ஒன்றாகும். கத்தரிக்காய் பெரும்பாலான மக்களுக்கு பிடிக்காமல் போக காரணம் அது சமைக்கும் முறைதான், சரியான முறையில் சமைத்துக் கொடுத்தால் கத்தரிக்காயையும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அந்த கத்திரிக்காய் கொண்டு சுவையான, அதே சமயம் இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்திற்கும் பக்காவாக பொருந்தும் சைடிஷ் செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் இந்த தஞ்சாவூர் கத்திரிக்காய் கொத்சை முயற்சி செய்து பாருங்கள். இந்த கத்திரிக்காய் கொத்சு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த பதிவில் சூப்பரான தஞ்சை ஸ்டைல் கத்தரிக்காய் கொத்சை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- கத்திரிக்காய் - 1/2 கப்
- சின்ன வெங்காயம் - 1/4 கப்
- தக்காளி - 2
- காய்ந்த மிளகாய் - 10
- கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
- உளுந்து பருப்பு - 1 ஸ்பூன்
- வெந்தயம் - 1/4 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- தனியா - 2 ஸ்பூன்
- மிளகு - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
- புளி - ஒரு எலுமிச்சை அளவு
- நல்லெண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு
தாளிக்க:
- நல்லெண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - 1 ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1/4 டீ ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1/4 டீ ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 2
- கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
செய்முறை:
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் காய்ந்த மிளகாய், தனியா, கடலைப்பருப்பு, உளுந்து பருப்பு, மிளகு, சீரகம், மற்றும் வெந்தயம் சேர்க்கவும்.
- அடுப்பை குறைவான தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து ஆற விடவும்.
- பின் அதை ஈரமில்லாத மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- அதில் தக்காளி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- அதனுடன் கத்திரிக்காயை சேர்த்து மிதமான தீயில் பத்து நிமிடங்களுக்கு வேக விடவும்.
- கத்தரிக்காய் நன்றாக வெந்ததும், அதை நன்றாக மசித்து விடவும்.
- அதனுடன் அரைத்து வைத்த பொடியை சேர்த்து நன்கு கிளறவும்.
- புளியை நன்றாக கழுவி சுத்தம் செய்து ஊற வைத்து, பின் நன்றாக கரைத்து ஒரு டம்ளர் வரும் அளவிற்கு எடுத்து கொள்ளவும்.
- அதை கத்தரிக்காய் உடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.
- பின் தண்ணீரில் நன்றாக அலசி சுத்தம் செய்த கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.
- இன்னொரு வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து காயவிடவும்.
- அதில் கடுகு சேர்த்து பொரிந்ததும் கருவேப்பில்லை சேர்க்கவும்.
- அதனுடன் காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து கத்தரிக்காய் உடன் சேர்த்து கிளறினால் சுவையான தஞ்சாவூர் கத்தரிக்காய் கொத்சு ரெடி!



Click it and Unblock the Notifications
