Latest Updates
-
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்..
உப்புமாவை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க...
Thakkali Upma Recipe In Tamil: காலையில் எப்பவும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? ஒருவேளை உப்புமா செய்தால், அதை வீட்டில் யாரும் சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அடுத்தமுறை உப்புமாவை கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் செய்யுங்கள். இப்படி உப்புமா செய்யும் போது, பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் இந்த உப்புமாவில் தக்காளியை சற்று அதிகமாக சேர்ப்பதால், சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும்.
உங்களுக்கு தக்காளி உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* நெய் - 2 டீஸ்பூன்
* ரவை - 1 கப்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
* முந்திரி - 10
* பெருங்காயத் தூள் - சிறிது
* பூண்டு - 10 பல்
* இஞ்சி - 1 சிறிய துண்டு
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 3 கப்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், ரவையை சேர்த்து நன்கு நிறம் மாற வறுத்து ஒரு தட்டில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து நன்கு வறுக்க
வேண்டும்.
* பிறகு அதில் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பெருங்காயத்
தூள், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நீரை ஊற்றி கிளறி, நீர் நன்கு கொதிக்க
ஆரம்பித்ததும், அதில் வறுத்த ரவையை சேர்த்து கிளறி, நீர் ஓரளவு
வற்றியதும், தீயைக் குறைத்து, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால்,
சுவையான தக்காளி உப்புமா தயார்.



Click it and Unblock the Notifications









