Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
1 கப் ரவையும், 1 தக்காளியும் வெச்சு.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...
Thakkali Rava Uthappam Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் என்ன டிபன் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இன்னும் என்ன டிபன் செய்வதென்று முடிவெடுக்கவில்லையா? உங்கள் வீட்டில் தோசை சுட கூட மாவு இல்லையா? கவலை வேண்டாம். வீட்டில் 1 கப் ரவையும், 1 தக்காளியும் இருந்தால், அற்புதமான சுவையில் ஒரு ஊத்தாப்பம் செய்து சாப்பிடலாம்.
இந்த தக்காளி ரவா ஊத்தாப்பம் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். முக்கியமாக இது பேச்சுலர்களும் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும். வேலை செல்பவர்கள் இப்படியான ஈஸியான டிபனை தெரிந்து வைத்துக் கொண்டால், டக்கென்று சமையலை முடிக்கலாம்.

இந்த தக்காளி ரவா ஊத்தாப்பத்துக்கு தேங்காய் சட்னி அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும். ஒருமுறை இந்த டிபனை செய்தால், நிச்சயம் வாரம் ஒருமுறை இந்த ஊத்தாப்பத்தை செய்வீர்கள். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கூட இப்படியான ஊத்தாப்பத்தை செய்து சாப்பிடலாம். ருசியானதும், சத்தானதும் கூட.
உங்களுக்கு தக்காளி ரவா ஊத்தாப்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி ரவா ஊத்தாப்பம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1 கப்
* தண்ணீர் - 1 கப் + தேவையான அளவு
* கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பூண்டு - 3 பல்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் ரவையை எடுத்து, அத்துடன் 1 கப்
நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 20 நிமிடம் கழித்து, ஊற வைத்த ரவையை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு, நறுக்கிய 1 தக்காளி,
3 பல் பூண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் 1 டேபிள் ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த மாவை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அத்துடன் பேக்கிங்
சோடாவை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து
கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை சற்று ஊத்தாப்பம் போன்று ஊற்றி, மேலே எண்ணெய்
சேர்த்து, சிறிது நேரம் மூடி வைத்து வேக வைத்து எடுத்தால், சுவையான
தக்காளி ரவா ஊத்தாப்பம் தயார்.



Click it and Unblock the Notifications