Latest Updates
-
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்.. -
பூமியின் உண்மையான எடை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி கிலோவா? ஷாக் ஆகாதீங்க -
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க..
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
Thakkali Pudina Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசனை செய்து கொண்டிருக்கிறீர்களா? அதுவும் சற்று புளிப்பாகவும், புத்துணர்ச்சியைத் தரக்கூடிய வகையிலும் ஒரு அருமையான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சட்னி ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் வீட்டில் தக்காளியும், புதினாவும் இருந்தால், அவற்றைக் கொண்டு தக்காளி புதினா சட்னியை செய்யுங்கள். இந்த சட்னியை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் கணக்கில்லாமல் சாப்பிடுவீர்கள். அந்த அளவில் ருசியாகவும் இருக்கும், செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு இந்த தக்காளி புதினா சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி புதினா சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 3 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
வதக்குவதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* பூண்டு 8 பல்
* புளி - சிறிது
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* புதினா - 1 கையளவு
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு சேர்த்து, அத்துடன் வரமிளகாயையும்
சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்துவிட்டு,
வாணலியின் சூட்டில் சிறிது நேரம் வறுத்து, ஒரு தட்டில் போட்டு குளிர
வைக்க வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, புளி
ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1 கையளவு புதினாவை சேர்த்து கிளறி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த கடலைப் பருப்பு தேங்காய் கலவையை
சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வதக்கிய மற்ற பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி,
சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில்
சிறிது நீரை ஊற்றி அலசி, சட்னியுடன் சேர்த்து கலந்து விட
வேண்டும்.
* இறுதியாக சட்னியை தாளிக்க ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம்,
வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து
கலந்தால், சுவையான தக்காளி புதினா சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
