Latest Updates
-
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
5 தக்காளியும், 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட...
Thakkali Karuppu Ulunthu Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் டிபனாக செய்யப் போகிறீர்களா? ஒரு வாரத்தில் குறைந்தது 4 நாட்களாவது இட்லி, தோசையை காலை உணவாக உண்பீர்களா? அப்படியானால் அந்த இட்லி, தோசைக்கு அடிக்கடி சற்று வித்தியாசமான சட்னியை செய்து சாப்பிட தோன்றும்.
உங்கள் வீட்டில் உள்ளோரும் வித்தியாசமான சட்னியை கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் தக்காளியும், கருப்பு உளுத்தம் பருப்பும் இருந்தால், அதைக் கொண்டு சட்னி செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு ஈஸியாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். மேலும் இது சத்தானதும் கூட. ஒருமுறை இந்த சட்னியை செய்தால், பின் வீட்டில் உள்ளோர் அடிக்கடி இந்த சட்னியை கேட்பார்கள். அந்த அளவில் ருசி அருமையாக இருக்கும்.

உங்களுக்கு தக்காளி கருப்பு உளுந்து சட்னி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி கருப்பு உளுந்து சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* வரமிளகாய் - 5
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கருப்பு உளுந்து - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 5 (பொடியாக நறுக்கியது)
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, பூண்டு, வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் கறிப்பிலை மற்றும் கருப்பு உளுந்தை சேர்த்து, உளுந்தின்
நிறம் லேசாக மாறும் வரை வறுக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சிறிய துண்டு
புளியையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, நன்கு வதக்கி, மூடி
வைத்து, தக்காளி மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வெந்ததும், அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்து, அத்துடன் சிறிது
நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள்
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான தக்காளி
கருப்பு உளுந்து சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
