Latest Updates
-
இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த கதம்ப சட்னியை செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
அக்டோபர் 16, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
துலாம் ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப்போகுது! -
Navratri 2026: நவராத்திரியில் துர்கா தேவியை கனவில் கண்டால் என்ன அர்த்தம் தெரியுமா? -
வாஸ்துப்படி வீட்டின் இந்த 5 இடத்தில் மயில் இறகை வையுங்க.. செல்வம் இருமடங்காக அதிகரிக்கும்.. -
18 ஆண்டுகளுக்கு பின் கடகம் செல்லும் கேது: இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிந்து அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
மணமணக்கும்.. தட்டப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
டியோடரண்ட், ப்ரா, ஹேர் டை - மார்பக புற்றுநோயை ஏற்படுத்துமா? - விளக்கும் மார்பகப் புற்றுநோய் நிபுணர்! -
சனி பகவான் ஆசியால் அடுத்த 118 நாட்கள் இந்த 5 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா இருப்பாங்க.. உங்க ராசி என்ன? -
இட்லி, தோசைக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை செய்யுங்க.. வழக்கத்தை விட 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
2 தக்காளியும், கடலைப்பருப்பும் இருந்தா இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்
Thakkali Kadalai Paruppu Chutney Recipe in Tamil: பெரும்பாலான தமிழ்நாட்டு வீடுகளில் காலை அல்லது இரவு உணவென்றால் அது எப்போதும் இட்லி அல்லது தோசைதான். இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷ் என்றால் அது எப்போதுமே சட்னிதான். பொதுவாக இட்லி, தோசைக்கு அனைவருக்கும் பிடித்த சட்னி என்றால் அது தேங்காய் சட்னிதான். ஆனால் தேங்காய் சட்னியுடன் தக்காளி சட்னியை சேர்த்து சாப்பிடும்போது அதனால் கிடைக்கும் அனுபவமே தனி. காலைப்பொழுதை மகிழ்ச்சியாகத் தொடங்க இதுவே சிறந்த வழி.

தக்காளி சட்னியை பொதுவாக ஒரே மாதிரிதான் அரைப்போம். தக்காளி சட்னியின் பொதுவான மூலப்பொருள் தக்காளியாக இருந்தாலும், அதனுடன் சேர்க்கும் மற்ற பொருட்கள்தான் அதற்கு சுவையைக் கொடுக்கிறது. தக்காளி சட்னி அரைக்கும் போது அதனுடன் சில குறிப்பிட்ட பொருளை சேர்த்து அரைத்தால் அதன் சுவை வித்தியாசமாகவும், தனித்துவமானதாகவும் இருக்கும். அதில் முக்கியமான ஒரு பொருள்தான் கடலைப்பருப்பு.
உங்களுக்கு தக்காளி கடலைப்பருப்பு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி கடலைப்பருப்பு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
- தக்காளி - 2
- பெரிய வெங்காயம் - 1
- கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
- வர மிளகாய் - 5
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- துருவிய தேங்காய் - 1 ஸ்பூன்
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
- முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நன்றாக கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, அதில் வர மிளகாய், கடலைப்பருப்பு மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.
- கடலைப்பருப்பு லேசான பொன்னிறமாக மாறி, நறுமணம் வரும் வரை இவ்வாறு வறுக்க வேண்டும். பின்னர் அவற்றை ஒரு தட்டில் எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
- மீதமுள்ள எண்ணெயில் வெங்காயத்தைச் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும். இப்போது தக்காளியைச் சேர்த்து, மென்மையாகும் வரை வதக்கவும். பின்னர் இதையும் தனியாக வைத்து ஆற வைக்கவும்.
- முதலில் வறுத்த கடலைப்பருப்பு, வர மிளகாய் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து, சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
- பின்னர் வதக்கிய தக்காளி, வெங்காயம், தேங்காய்மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து, விழுதாக அரைத்து கிண்ணத்திற்கு மாற்றவும்.
- ஒரு கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
- கடுகு பொரிந்ததும் இதை சட்னி மீது கொட்டி நன்றாக கிளறினால் இட்லி, தோசைக்கு ஏற்ற சூப்பரான தக்காளி, கடலைப்பருப்பு சட்னி ரெடி



Click it and Unblock the Notifications
