Latest Updates
-
நவம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பொறுமையை சோதிக்கும் மோசமான நாளாக இருக்குமாம் -
18 ஆண்டுகளுக்கு பின் மகரம் செல்லும் ராகு: டிசம்பர் முதல் இந்த 3 ராசிக்கு வரப்பிரசாதமா இருக்கப்போகுது! -
1 டம்ளர் பச்சரிசி இருந்தா.. கார்த்திகை தீபத்துக்கு இந்த செட்டிநாடு கந்தரப்பம் செய்யுங்க.. -
ஆண்கள் என்னென்ன Skin Care Products யூஸ் பண்ணலாம்? விளக்கும் சரும நிபுணர்! -
பரணி தீபம் 2026 எப்போது? எத்தனை தீபம் ஏற்றணும்? வீட்டின் எந்தெந்த இடங்களில் தீபம் வைக்க வேண்டும்? -
டிசம்பரில் வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: 2027 ஜூன் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்! -
நாவூறும்.. ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் டிக்கா மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
மூச்சுத்திணறல் நுரையீரல் பிரச்சனை மட்டுமல்ல.. இதய நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
நவம்பர் இறுதியில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும், பணம் குவியும்! -
அரைச்சுவிட்ட சிக்கன் சால்னா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்..
மொறுமொறுப்பான தக்காளி தோசை - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Crispy Instant Thakkali Dosa Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் தோசை தான் செய்வீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? இருப்பினும் வீட்டில் உள்ளோர் தோசை தான் வேண்டும் என்று கேட்கிறார்களா? அப்படிப்பட்ட சூழ்நிலையில் காலையில் சட்டென்று நல்ல சுவையான, அதே சமயம் மொறுமொறுப்பான தோசையை செய்ய நினைத்தால், தக்காளி தோசையை செய்து கொடுங்கள்.
இந்த தக்காளி தோசைக்கு அரிசி மாவு, ரவை மற்றும் தக்காளி இருந்தால் போதும் நல்ல சூப்பரான தோசையை தயாரித்து சாப்பிடலாம். முக்கியமாக இந்த தோசையை வெறுமனே கூட சாப்பிடலாம். சைடு டிஷ் தேவைப்பட்டால் தேங்காய் சட்னியை செய்து சாப்பிடலாம்.

உங்களுக்கு இந்த தக்காளி தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அரிசி மாவு - 1 கப்
* ரவை - 1/2 கப்
* பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு
* நன்கு கனிந்த தக்காளி - 4 (நறுக்கியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பெரிய மிக்சர் ஜாரை எடுத்துக் கொண்டு, அதில் 1 கப் அரிசி
மாவு மற்றும் 1/2 கப் ரவையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் நறுக்கிய தக்காளியை
சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் சீரகத்தை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை எடுத்துக் கொண்டு, ரவா தோசை
பதத்திற்கு நீரை ஊற்றி நன்கு கலந்து, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் நறுக்கிய கொத்தமல்லி,
பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் நன்கு சூடானதும், மாவை
நன்கு கலந்து தோசைக் கல்லில் அள்ளி ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி,
குறைவான தீயில் வைத்து மொறுமொறுவென்று ஆனதும் தோசையை திருப்பிப்
போட்டு வேக வைத்து எடுத்தால், மொறுமொறுப்பான தக்காளி தோசை தயார்.



Click it and Unblock the Notifications
