4 தக்காளி இருந்தா.. மதியம் வீடே மணக்குற அளவுக்கு இப்படி தக்காளி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க..

Posted By:

Thakkali Biryani Recipe In Tamil: மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதே சமயம் வீட்டில் உள்ளவர்களின் பாராட்டைப் பெறும் வகையில் ருசியான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பாசுமதி அரிசியும், 4 தக்காளியும் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு வீடே மணக்கும் அளவில் தக்காளி பிரியாணியை செய்து சாப்பிடுங்கள்.

இந்த தக்காளி பிரியாணி ஒரு ஒன்பாட் ரெசிபி என்பதால், காலையில் குழந்தைகளுக்கு லன்ச்பாக்ஸிற்கும் செய்து கொடுக்கலாம். இந்த ஒரு சிம்பிளான தக்காளி பிரியாணி சிக்கன் பிரியாணியே தோற்கும் அளவில் ருசியாக இருக்கும். அதோடு இது செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும் என்பதால் பேச்சுலர்களும் இதை ட்ரை செய்யலாம்.

Thakkali Biryani How to Make Tomato Biryani Recipe

உங்களுக்கு தக்காளி பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பாசுமதி அரிசி - 250 கிராம் (நீரில் 20-25 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.)
* தக்காளி - 4 (நறுக்கியது)
* வெங்காயம் - 3 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 4-5 (கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* புதினா - 1/2 கைப்பிடி
* கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
* கறிவேப்பிலை - சிறிது
* தயிர் - 100-150 மிலி
* எண்ணெய் - 100 மிலி
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* பச்சை ஏலக்காய் - 3
* கருப்பு ஏலக்காய் - 3
* பிரியாணி இலை - 2
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, பச்சை மற்றும் கருப்பு ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கீறி வைத்துள்ள பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து, ஒருமுறை வதக்கி, பின் அதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள், புதினா, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தயிரை சேர்த்து கிளறி, 1 கப் அரிசிக்கு 1 1/4 கப் தண்ணீர் என்ற வீதத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
* அதன் பின் சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது முந்திரி பருப்பை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை கழுவி சேர்த்து கிளறி, குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து, 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கிளறினால், சுவையான தக்காளி பிரியாணி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, July 8, 2025, 13:15 [IST]
Desktop Bottom Promotion