Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இட்லி மாவு இருந்தா போதும்.. 5 நிமிடத்தில் தேன் மிட்டாய் செய்யலாம் தெரியுமா?
நாம் சிறுவயதில் பெட்டிக் கடைகளில் தேன் மிட்டாய் வாங்கி சுவைத்திருப்போம். இன்றும் அந்த தேன் மிட்டாய் நிறைய பேரின் மிகவும் விருப்பமான ஸ்நாக்ஸ் என்றே கூறலாம். இப்படிப்பட்ட தேன் மிட்டாயை நாம் வீட்டிலேயே செய்யலாம். அதுவும் கோடைக்கால விடுமுறையில் இருக்கும் குழந்தைகளுக்கு ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், தேன் மிட்டாய் செய்து கொடுங்கள்.
தேன் மிட்டாய் குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் விரும்பி சாப்பிடக்கூடியது. முக்கியமாக ஒருமுறை தேன் மிட்டாய் செய்தால், அதை 3 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். குறிப்பாக தேன் மிட்டாயை வீட்டில் உள்ள இட்லி மாவை கொண்டே செய்யலாம் தெரியுமா? அதுவும் ஒரு 4 பொருட்கள் இருந்தால் போதும் 3 நிமிடத்தில் தேன் மிட்டாயை செய்துவிடலாம்.

உங்களுக்கு தேன் மிட்டாய் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேன் மிட்டாய் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அரிசி - 1 கப்
* உளுத்தம் பருப்பு - 1/4 கப்
* பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
* கேசரி பவுடர் - 1 சிட்டிகை
* சர்க்கரை - 1 கப்
செய்முறை:
* முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை 4 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* பின் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சர்க்கரையை சேர்த்து, 1
கப் நீரை ஊற்றி கிளறி, சர்க்கரையை கரைய வைக்க வேண்டும். கம்பி
பதத்திற்கு வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அரைத்த மாவில் சிறிது பேக்கிங் சோடா மற்றும் கேசரி பவுடர்
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். மாவானது மிகவும் கெட்டியாக
இருக்கக்கூடாது. ஓரளவு நீராக இருக்க வேண்டும்.
* பின் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் நன்கு சூடானதும். ஒரு ஸ்பூனை எடுத்து, அதைப் பயன்படுத்தி
மாவை எண்ணெயில் ஒவ்வொரு ஸ்பூனாக ஊற்றி, பொன்னிறமாக பொரித்து எடுக்க
வேண்டும்.
* சர்க்கரை பாகு கம்பி பதத்திற்கு வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு,
பொரித்து வைத்துள்ள தேன் மிட்டாய்களை சர்க்கரை பாகுவில் போட்டு நன்கு
பிரட்டி, 2-3 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
* பின் ஒரு தட்டில் ஊற வைத்துள்ள தேன் மிட்டாய்களை எடுத்து வைத்தால்,
சுவையான தேன் மிட்டாய் தயார்.
குறிப்பு:
* அரிசி, உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைக்க நேரமில்லாவிட்டால்,
இந்த தேன் மிட்டாயை வீட்டில் உள்ள இட்லி மாவைக் கொண்டே செய்யலாம்.
* கேசரி பவுடர் சேர்க்க விரும்பாவிட்டால், அதைத் தவிர்த்துக்
கொள்ளலாம். கேசரி பவுடர் வெறும் நிறத்தை மட்டும் தான் கொடுக்கும்.



Click it and Unblock the Notifications