உத்தர பிரதேச ஸ்டைல் தஹ்ரி புலாவ் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்

Posted By:

Tehri Pulao Recipe in Tamil: ஒரே மாதிரி வெரைட்டி ரைஸ் செய்து போரடித்து விட்டதா? மதிய நேரத்தில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதே சமயம் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இதுவரை செய்யாத வித்தியாசமான ஒரு உணவை செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் பாசுமதி அரிசியும், காய்கறிகளும் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு வீடே மணக்கும் அளவில் உத்திர பிரதேச ஸ்டைல் தஹ்ரி புலாவை செய்து பாருங்கள்.

Tehri Pulao Recipe How to Make at Home in Tamil

இந்த தஹ்ரி புலாவ் ஒரு ஒன்பாட் ரெசிபி என்பதால், காலையில் குழந்தைகளுக்கு லன்ச்பாக்ஸிற்கும் செய்து கொடுக்கலாம். இந்த ஒரு சிம்பிளான உத்திர பிரதேச புலாவ் சிக்கன் பிரியாணியே தோற்கும் அளவிற்கு ருசியாக இருக்கும். அதோடு இது செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும் என்பதால் பேச்சுலர்களும் இதை ட்ரை செய்யலாம். இந்த புலாவ் சுவையானது மட்டுமல்ல மிகவும் ஆரோக்கியமானதும் கூட.

உங்களுக்கு உத்திர பிரதேச ஸ்டைல் தஹ்ரி புலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தஹ்ரி புலாவ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- பாஸ்மதி அரிசி - 1½ கப்
- நெய் - 2 டேபிள் ஸ்பூன்
- சீரகம் - 1 டீ ஸ்பூன்
- பிரியாணி இலை - 1
- மிளகு - ½ டீ ஸ்பூன்
- கருப்பு ஏலக்காய் - 1
- பச்சை ஏலக்காய் - 4
- கிராம்பு - 5
- பட்டை - 1 அங்குலம்
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- வெங்காயம் - 1 (சிறியது)
- பூண்டு - 5 பல்
- உருளைக்கிழங்கு - 1
- கேரட் - 1
- பீன்ஸ் - 5
- பட்டாணி - 3 டேபிள் ஸ்பூன்
- காலிஃபிளவர் - 10 பூக்கள்
- மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன்
- கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
- புதினா - ஒரு கைப்பிடி அளவு
- பச்சை மிளகாய் - 2
- எலுமிச்சை பழம் - ½
- உப்பு - தேவையான அளவு

செய்முறை:

- பாஸ்மதி அரிசியை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு தண்ணீரில் கழுவி விட்டு பின் 20 நிமிடங்களுக்கு ஊற விடவும்.

- கேரட் மற்றும் பீன்ஸை கழுவி விட்டு, உங்களுக்கு வேண்டிய அளவில் நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கையும் மண் இல்லாமல் அலசி மேற்தோலை நீக்கி விட்டு கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

- சூடு தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து சிறிது நேரம் காலிப்ஃபிளவர் துண்டுகளை சேர்த்து வைக்கவும். பின் நீரை நீக்கி விட்டு எடுத்து வைத்து கொள்ளவும்.

- பட்டாணி பதப்படுத்தப்பட்டது என்றால் முதல் நாளே ஊற வைத்து வேக வைக்கவும். பதப்படுத்தப்படாதது என்றால் நேரடியாக சேர்த்து கொள்ளலாம். எலுமிச்சை பழத்தை புழிந்து சாறு எடுத்து விதைகளை நீக்கி கொள்ளவும்.

- பூண்டு மற்றும் வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து வெங்காயத்தின் கருப்பு நிற பூஞ்சை போக நன்கு கழுவி, வெங்காயத்தை மெலிதாக நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

- பச்சை மிளகாயை கழுவி காம்புகளை நீக்கி விட்டு கீறி வைக்கவும். கொத்தமல்லி மற்றும் புதினாவை மண் இல்லாமல் சுத்தமாக அலசி விட்டு பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.

- குக்கரை அல்லது அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் சேர்க்கவும். பின் அதனுடன் - சீரகம், பிரியாணி இலை, மிளகு, கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், கிராம்பு, மற்றும் பட்டை சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுக்கவும்.

- பின் அதனுடன் நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் நறுக்கி வைத்த உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், காலிஃபிளவர் மற்றும் பட்டாணி சேர்க்கவும்.

- காய்கறிகள் நன்கு பொன்னிறமாக மொறுமொறுப்பாக வதங்கும் வரை வேக விடவும். பின் அடுப்பை மிதமான தீயில் வைத்து அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மற்றும் கரம் மசாலா சேர்க்கவும்.

- அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, நறுக்கிய கொத்தமல்லி, புதினா, மற்றும் கீறி வைத்த மிளகாய் சேர்த்து மசாலா பொருட்களின் பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும்.

- பின் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வரும் வரை வைத்திருக்கவும். பின் கழுவி ஊற வைத்த அரிசியை சேர்த்து மெதுவாக கிளறவும்.

- அதனுடன் பிழிந்து வைத்த எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி, 20 நிமிடங்கள் மிதமான தீயில் பாத்திரத்தை மூடி வேக விடவும். பின் அரிசி நன்றாக வெந்திருப்பதை உறுதி செய்து விட்டு அடுப்பை அணைக்கவும்.

- கடைசியாக சிறிதளவு நெய், நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து கரண்டியின் அடிப்பகுதியால் மென்மையாக கிளறினால் சுவையான டெஹ்ரி புலாவ் ரெடி! இந்த புலாவை ராய்தாவுடன் சேர்த்து பரிமாறினால் சுவை அட்டகாசமாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Monday, November 2, 2026, 22:13 [IST]
Desktop Bottom Promotion